கடலூர் மகே.செல்வமணிக்கு சிறந்த செய்தியாளர் விருது
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க 10 ஆம் ஆண்டு மாநில மாநாட்டில் கடலூரை சேர்ந்த மாவட்ட செய்தியாளர் மகே.செல்வமணிக்கு சிறந்த செய்தியாளர் விருது வழங்கப்பட்டது.
சென்னை சர்.பி.டி.தியாகராஜர் அரங்கத்தில் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 10வது மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த்,கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனர் கருணாகரன் ஐஏஎஸ், மீடியா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் நியூ டெல்லியை சேர்ந்த அருண் சர்மா மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர் ப. ஜோதிமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் இவர்கள் முன்னிலையில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு கடலூரை சேர்ந்த மகே. செல்வமணிக்கு சிறந்த செய்தியாளர் விருது வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு உண்மை செய்திகளை உடனுக்குடன் வெளியிட்ட செல்வமணியின் செயல் திறனைப் பாராட்டி இவ்விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படுவதாக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. சிறந்த செய்தியாளர் விருது பெற்ற செல்வமணிக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகளும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.