தமிழகம்

ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உயர் பதவியா ? பல்லடத்தில் பரபரப்பு !

திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் ஊராட்சி ஒன்றியம், 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மேலும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் அனுப்பட்டி, ஆறுமுத்தாம்பாளையம், சித்தம்பலம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், சுக்கம்பாளையம், பருவாய், பணிக்கம்பட்டி, வேலம்பாளையம், பூமலூர், புளியம்பட்டி, கரைப்புதூர், கரடிவாவி, கே.அய்யம்பாளையம், கே.கிருஷ்ணாபுரம், இச்சிப்பட்டி, கணபதிபாளையம், வடுகபாளையம்புதூர் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலவர்களின் பதவி காலம் முடிவடைததை அடுத்து பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கன்கராஜ் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் மற்றும் மனை வரன்முறைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை கண்காணித்து அனுமதி வழங்கும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பிடிஓ வாக பணியாற்றிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சைட் அப்ரூவலுக்கு அதிக அளவு லஞ்சம் கேட்பதாகவும், பஞ்சாயத்து ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து ஆய்வாளர் எழிலரசி தலைமையில் அன்றைய மாவட்ட ஆய்வு குழு அலுவலர் துரைசாமி முன்னிலையில் விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்தவர்களிடம் சோதனையிட்டதில், பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசனிடம் இருந்து ரூ. 51,000/- த்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் சைட் அப்ரூவலுக்காக பொதுமக்களிடம் இருந்து பிடிஓ கனராஜிக்கு லஞ்சமாக கொடுக்க வாங்கி வந்த பணம் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து நடந்த சோதனையில் 19 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஊராட்சி செயலர், ஒப்பந்ததாரர் உட்பட 5 பேரிடம் இருந்து மொத்தமாக ரூ.82,875/- ஐ கைப்பற்றிய போலீசார் பிடிஓ கனகராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கோவையில் 3 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் தற்போது பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளின் பி டி ஓ வாக கனகராஜ் பணியாற்றி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆய்வு குழு அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற சோதனையில் ஊழல் வழக்கில் சிக்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் தற்போது 20 கிராமங்களில் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு முழு அதிகாரம் படைத்த அதிகாரியாக வலம் வருவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி ஒப்பந்த பணிகள், வரன்முறை பணிகள் என முக்கிய பணிகளில் ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கிய கனகராஜை எவ்வாறு இது போன்ற பதவியில் அமர வைத்து அழகு பார்ப்பது? திருப்பூர் மாவட்டத்தில் வேறு யாரும் இந்த பதவிக்கு தகுதியானவரே இல்லையா?. அரசுத்துறை மாவட்ட அதிகாரி முன்னிலையில் ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரி எவ்வாறு இது போன்ற பதவிக்கு பரிந்துரை செய்தார்கள். மேலும் தற்போதுள்ள சூழலில் ஊராட்சி தலைவர்களுக்கான தேர்தல் முடியும் வரை நேர்மையான அதிகாரியை தேர்ந்தெடுக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button