நிதி நிறுவன மோசடிப் பணத்தில் சினிமா தயாரித்த தயாரிப்பாளர் !
நிதி நிறுவனங்கள் நடத்தி அதிக வட்டி வருவதாகக் கூறி பொது மக்களிடம் பலநூறு கோடி ரூபாய் ஏமாற்றிய “நியோ மேக்ஸ்” நிறுவனத்தின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்து, போராட்டம், புகார் என்கிற செய்தி நாள்தோறும் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் “நியோ மேக்ஸ்” என்கிற பெயரில் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், நாள் ஒன்றுக்கு 1800 ரூபாய் வீதம் நூறு நாட்களில் 1.80 லட்சம் திருப்பித் தருவதாக கவர்ச்சிகரமான வார்த்தைகள் கூறி விளம்பரங்கள் செய்துள்ளனர்.
இந்த விளம்பரங்களை உண்மை என நம்பி அப்பாவி ஜனங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு முதலீடு செய்துள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் தாங்கள் நினைத்த குறிப்பிட்ட தொகை வசூலாகும் வரை அந்தப் பகுதிகளில் மாதாமாதம் வட்டியை கொடுத்துள்ளனர். வட்டி கொடுப்பதையும் விளம்பரங்கள் செய்து பணம் படைத்த பணக்காரர்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் நிறுவனத்தை பூட்டிவிட்டு தலை மறைவாகியதாக கூறுகின்றனர்.
அந்த வகையில் இந்த நிறுவனத்தில் 25 லட்சம் முதலீடு செய்து ஏமாந்த ஒருவர் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் “நியோ மேக்ஸ்” நிதி நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்த போது “நியோ மேக்ஸ்” நிதி நிறுவனத்தின் உரிமையாளர் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் தயாரிப்பாளர் துரை. வீர சக்தி என்பது தெரியவந்தது.
மேலும் பொது மக்களிடம் ஏமாற்றிய பணத்தில் சினிமா தயாரித்து, அதன் மூலம் பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்து அதை அலுவலகத்தில் போட்டோவாக மாட்டி வைத்து பிரபலங்களே அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் என நம்பும்படியாக பேசி ஏமாற்றியிருக்கிறார்கள், இந்த மோசடியில் தங்கர்பச்சானுக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகிப்பதாகவும் கூறுகின்றனர்.