டப்பிங் யூனியன் தேர்தல் : ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி!
சினிமா டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக உள்ள ராதாரவி பதவி காலம் முடிவடைந்ததால் தேர்தல் அறிவிக்கபட்டது.
டப்பிங் சங்கத்தில் ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்த போதும், அப்படி புகார் எழுப்பும் உறுப்பினர்களை சங்கத்தை விட்டே ராதாரவி நீக்கிவிட அதை எதிர்த்து பலர் நீதிமன்றம் போனார்கள். அப்படி நீக்கப்பட்ட பாடகி சின்மயி நீதிமன்றம் சென்று ராதாரவி எடுத்த தடையை நீக்கி மீண்டும் உறுப்பினராக ஆனார். இந்த நிலையில் டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராமராஜ்ஜியம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாடகி சின்மயி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சின்மயி உள்ள ராமராஜ்ஜியம் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் திடீரென மனுத்தாக்கல் செய்தார். இதனால் சின்மயி அணி உற்சாகம் அடைந்து இருக்கிறது.
அதே நேரம் நாசர் வருகையால் ராதாரவி அணி கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.காரணம் ஏற்கனவே நடிகர் சங்கத்தில் பல காலமாக ஒன் மேன் ஷோவாக கோலோச்சி வந்த ராதாரவி அதிகாரத்தை நாசர் தலைமையிலான விஷால் அணி மண்ணை கவ்வ வைத்து படுதோல்வி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது. அதோடு நாசர் தலைமையில் புதிய அணி நடிகர் சங்க பதவிகளுக்கு வந்ததும் முந்தைய நிர்வாகத்தினர் செய்த முறைகேடுகளை கண்டிறியும் பணியில் இறங்கினார்கள்.
இதில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான காஞ்சிபுரம் வேங்கட மங்கலம் இடத்தை ராதாரவி சத்தமில்லாமல் விற்று மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. போலீசார் இந்த மோசடி வழக்கில் ராதாரவி மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து இருக்கிறார்கள். இந்த நில மோசடி வழக்கில் தனக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜவில் இணைந்தார். இது ஒருபக்கம் இருக்க டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டியிடுவது கோடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் நடிகர் சங்கத்தைப் போலவே டப்பிங் யூனியன் பதவிகளிலும் ராதாரவி பல காலமாக தனி அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறார். இப்போது நாசர் போட்டியிட வந்ததால் நடிகர் சங்கத் தேர்தலில் படு தோல்வி அடைந்தது போல ராதாரவி டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவி மண்ணை கவ்வப் போகிறாரோ…
& கோடங்கி