தேர்தலில் பெண் அதிகாரியின் பணத்தை செலவு செய்யும் தயாரிப்பாளர் ?.!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இதோடு தலைவர், துணைத் தலைவர் பதவிகள் தவிர மற்ற பதவிகளுக்கு இன்னொரு அணியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் முரளி தலைமையிலான அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் கதிரேசன் ( ஃபைவ் ஸ்டார் ) என்பவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தாணுவின் ஏற்பாட்டில் கதிரேசன் என்பவரை செயலாளர் பதவிக்கு மூன்றாவது அணியில் போட்டியிட வைத்திருக்கிறார்கள். தாணு ஏன் கதிரேசனை ( ஃபைவ் ஸ்டார் ) தோற்கடிக்க வேண்டும் என நினைக்கத் தோன்றும். ஏனென்றால் விஷால் நிர்வாகத்தில் கதிரேசன் செயலாளராக இருந்தபோது, விஷாலுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கதிரேசனை விஷாலுக்கு எதிராக செயல்படுமாறு தாணு உள்பட சில தயாரிப்பாளர்கள் பேசியிருக்கிறார்கள். விஷாலுக்கு எதிராக சங்கத்திற்கு பூட்டு போடும்போது அந்தப் பிரச்சினையை கதிரேசன் தான் எதிர்கொண்டு சமாளித்தார்.
இதனால் கதிரேசனை ( ஃபைவ் ஸ்டார் ) பழிவாங்கும் நோக்கத்தில் அதே பெயரில் ஒருவரைத் தேடும்போது இராஜபாளையத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கதிரேசன் என்பவரது பெயர் இவர்களது கண்ணில் பட்டுள்ளது. உடனடியாக அவரை அழைத்து வரச் சொல்லி செயலாளர் பதவிக்கு போட்டியிட ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர் அந்தப் பகுதியில் கவுன்சிலர் பதவியில் இருக்கிறாராம். இதற்கான அனைத்து வேலைகளும் தாணுவின் கண்ணசைவில்தான் நடந்ததாம்.
மேலும் இதுசம்பந்தமாக சில தயாரிப்பாளர்கள் பேசுகையில்… கதிரேசன் என்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பகுதியில் பதிவுத்துறை அலுவலகத்தில் உதவி பதிவாளராக பணிபுரியும் பெண் அதிகாரிக்கும் இவருக்கும் நெருங்கிய உறவு இருப்பதாகவும், பதிவுத்துறை அலுவலகத்தில் அவருக்கு வரும் வருமானத்தை வைத்துத்தான் இந்த தேர்தலில் அவர் செலவு செய்வதாகவும் கூறுகிறார்கள். கதிரேசன் ( ஃபைவ் ஸ்டார் ) சில வருடங்களாக எந்த அணியிலும் சேராமல் சுயேச்சையாக நின்றே வெற்றி பெற்றவர். பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இன்னும் எத்தனை கதிரேசன்களை தாணு ஏற்பாடு செய்தாலும் பிரயோஜனம் இருக்காது. இங்கு நடைபெறும் அரசியல் தெரியாமல் அந்த கதிரேசன் இவர்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.
மேலும் இதுவரை தாணு ஆதரவு தெரிவித்து வேலைபார்த்த யாரும் எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக சரத்குமார், ஜசரி கணேஷ், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் ராதாகிருஷ்ணன், டி. ராஜேந்தர் ஆகியோர் தாணு ஆதரவு தெரிவித்ததால் தோற்கடிக்கப்பட்டவர்கள். அவ்வளவு ராசியான தாணுதான் இந்த தேர்தலில் முரளிக்கு வேலை பார்க்கிறார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் தாணு தான் தேர்வு செய்திருக்கிறார். தேர்தல் முடிவு எப்படி வரும் என்பது அனைவரும் அறிந்ததே !
இந்த தேர்தலில் யார்யார் வெற்றி பெறுவார்கள் என்கிற சர்வேயில்.. உறுதியான வெற்றி யாருக்கு ? என்கிற விபரம் விரைவில்…