பேத்தியின் மீது ஒருதலை காதல் : கொலை செய்யப்பட்ட பாட்டி !
மதுரை திருமங்கலம் அருகே சின்ன மறவன்குளம் என்ற வையம்பட்டியில் வீட்டு வாசலில் தூங்கிய மூதாட்டி மீது கல்லை போட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வையம்பட்டியை சேர்ந்தவர் பால்சாமி கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள்(65).
இவர்களுக்கு குணசேகரன், பாஸ்கர் என்ற மகன்களும், வசந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மூத்தமகன் குணசேகரன் கோவைக்கு சென்றதால் வையம்பட்டியிலுள்ள அவரது வீட்டில் ராஜம்மாள் தங்கியுள்ளார். பேத்தி லட்சுமி மற்றும் ராஜம்மாளின் தம்பி மகள் அம்சவல்லி ஆகியோர் வீட்டிற்குள்ளும், மூதாட்டி ராஜம்மாள் வாசல் திண்ணையிலும் படுத்து தூங்கியுள்ளனர். அதிகாலை பால்காரர் வந்து பார்த்த போது மூதாட்டி ராஜம்மாள் ரத்தவெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தகவல் கூறினார். இதனை தொடர்ந்து வீட்டிற்குள் தூங்கிய லட்சுமி மற்றும் அம்சவல்லி ஆகியோர் வெளியே வந்து ராஜம்மாள் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் அருகே ரத்தக்கறையுடன் கல் கிடந்தது. கல்லை தலையில் போட்டு ராஜம்மாளை மர்மநபர் படுகொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டிஎஸ்பி அருண், தாலுகா இன்ஸ்பெக்டர் பவுன்ஏசுதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர். போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியதில் நள்ளிரவில் ஒரு மர்மநபர் ஓடியதை பார்த்ததாக சிலர் கூறினர். இதனை தொடர்ந்து போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுது லட்சுமியின் கண்ணில் சிறிதளவும் கவலை இல்லாமலும் பயத்தில் நின்றது போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது அதன் அடிப்படையில் லட்சுமியை விசாரணை மேற்கொண்டபோது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தன்னை இதே ஊரை சேர்ந்த அஜித் என்பவன் காதலிக்க வற்புறுத்தி வருவதாகவும் அவனை பாட்டி கண்டித்ததாகவும் விசாரணையில் லட்சுமி கூறினார்.
கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க திருமங்கலம் நகர் துணை கண்காணிப்பாளர் அருண் கிரைம் டீம் தனிப்படை போலீசார் ஆய்வாளர் ஏசுதாஸ் மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பாண்டி பாண்டியராஜன் ராமர் ஆகியோர் தலைமையில் கொலையாளியை தீவிரமாக தேடினர். இதில் இதே பகுதியைச் சேர்ந்த காசி என்பவரது மகன் அஜித் குமார். இவன் லட்சுமியை ஒரு தலையாக காதலித்து வந்தது தெரியவந்தது. இதனை அடிக்கடி லட்சுமியின் பாட்டி ராஜம்மாள் அஜித்குமாரை கண்டித்து வந்துள்ளார். தனது காதலுக்கு லட்சுமியின் பாட்டி ராஜம்மாள் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாக மனதில் துரோகத்தை வளர்த்துக்கொண்டு ராஜம்மாளை தீர்த்துக்கட்ட அஜித் குமார் முடிவு செய்தான். அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில் தூங்காமல் விழித்துக் கொண்டு காத்திருந்த அஜித்குமார் இவனுக்கு ஏதுவாக ராஜம்மாள் மகன் சேகர் தனது மூத்த மகள் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக கோயம்பத்தூர் குடும்பத்துடன் சென்றுள்ளார். இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி அஜித்குமார் தனது உறவினரின் குமார் என்பவரது மகன் பெருமாளின் துணையோடு இருவரும் சேர்ந்து ராஜம்மாள் இரவு அசந்து தூங்கிய போது அருகில் கருங்கல் கிடந்ததை தூக்கி ராஜம்மாள் தலையில் பின் பகுதியில் போட்டுள்ளார் இதில் ராஜம்மாள்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். உடனடியாக இறந்து உள்ளதை அறிந்து ஒன்றும் அறியாதது போல் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் குளித்து விட்டு வீட்டிற்கு சென்று நல்லவன் போல் தூங்கி எழுந்து காலையில் கொலை குறித்த சம்பவம் ஊரே திரண்டு நின்று அதிர்ச்சியில் சோகத்தில் மூழ்கியபோது ஒன்றும் அறியாதவன் போல் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்து உள்ளான். போலீசாரின் நுண்ணறிவுத்திறன் அப்பகுதியில் அலைபேசி எண்ணை பதிவு செய்து கண்டுபிடிக்கப்பட்டன இதில் அஜித்குமார் என்பவரது அலைபேசியும் குமார் என்பவர் அலைபேசியும் இரவில் ராசம்மாள் படுத்திருந்த வீட்டில் அருகே இடத்தை காட்டியதில் இருந்தது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி கொலை நடந்த சம்பவத்திற்கு அஜீத் குமாரும் பெருமாலும் தான் காரணம் என்பதை கண்டுபிடித்தது. கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட திருமங்கலம் நகர் போலீசார் 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு பெருமாள் அஜித்குமார் ஆகிய இரு குற்றவாளிகளையும் மதுரை சிறையிலும் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர். ஒருதலை காதலால் இடையூறாக இருந்த சாகும் வயதில் தள்ளாடிய மூதாட்டியை கொலை செய்து தனது வாழ்க்கையே அழித்துக்கொண்ட வாலிபர்கள் தற்போது சிறை வாழ்க்கை வரை சென்று வனவாசம் அனுபவிக்கின்றனர்.
- நீதிராஜ பாண்டியன்