தமிழகம்

இந்தியன் திரைப்பட பாணியில் ரூ.200 லஞ்சம் கொடுத்தால்தான் கோப்பில் கையெழுத்து

மதுரை மேலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக மத்திய கிளையில் பெண் கண்காணிப்பாளர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியன் திரைப்படத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரியும் நடிகர் செந்தில் லஞ்சப்பணம் இருக்கும் கோப்பில் மட்டும் கையெழுத்திடுவார். லஞ்சப் பணம் இல்லாத கோப்புகளை விசிறி அடிப்பார். காமெடிக்காக அமைக்கப்பட்ட அக்காட்சி, திரைப்பட ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோன்று பெண் அதிகாரி ஒருவர் 200 ரூபாய் லஞ்சம் கொடுக்கும் நபர்களின் கோப்பை மட்டும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக கம்ப்யூட்டர் பிரிவிற்கு பதிவு செய்ய அனுப்புவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விசாரித்ததில், வீடியோவில் இருக்கும் பெண் அதிகாரி மதுரை மேலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக மத்திய கிளையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி என்பது தெரிந்தது.

இதுகுறித்து அந்த வட்டார போக்குவரத்து கழக மத்திய கிளையின் பொறுப்பு ஆர்டிஓ பொன்னுரங்கத்தை தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது. அதற்கு அவர், அந்த வீடியோவை தாம் இன்னமும் பார்க்கவில்லை என்றும், ஜோடிக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றும் முதலில் தெரிவித்தார். பின்னர் அலுவலகத்துக்கு சென்று வீடியோவை பார்த்துவிட்டு பேசுவதாக கூறி மௌனமானார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button