சினிமா

திரைப்பட இயக்குனர், நட்சத்திர விடுதியில் வெட்டிப் படுகொலை…

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தாலுகாவில் உள்ள அரணாரைக் கிராமத்தைச் சேர்ந்தவரும், 2011 ஆம் ஆண்டு வெளிவந்த “தமிழ் தேசம்” திரைப்படத்தின் இயக்குனரும், தமிழ்ச்செல்வன் என்கிற அப்துல் ரகுமான் இன்று மாலை பெரம்பலூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் கதாநாயகனாக நடித்த “தமிழ் தேசம்” திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு சில காலம் கழித்து இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது பெயரை அப்துல் ரகுமான் என மாற்றிக் கொண்டு, இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துகொண்டு தனது இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளார். பின்னர் “தேசிய பாதுகாப்பு சட்டம்” என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன், “தமிழ்த்தாய்” விருதையும் தமிழ்ச்செல்வனுக்குப் பெற்றுத்தந்தது.

தற்போது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில், நடிகர் சத்தியராஜை வைத்து படம் இயக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் ஜீன்-5 ஆம் தேதி இவருக்கு பிறந்தநாள் என்பதால் பெரம்பலூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய போது, கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். விசாரணையில் இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இவருக்கு நண்பர்களால் எப்போதும் ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்ததாகவும், நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அப்துல் ரகுமான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தி பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இவரது உடலை எரிப்பதா ? புதைப்பதா ? என “ஆன்டி இண்டியன்” படத்தின் க்ளைமாக்ஸ் பாணியில் அவரது உறவினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button