சினிமா

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள “வேழம்” ஜூன் 24 ல் வெளியீடு

கே-4 கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கேசவன் வழங்கும், எஸ்.பி.சினிமாஸ் வெளியீட்டில்,
அசோக் செல்வன் நடிக்கும் “வேழம்” திரைப்படம் ஜூன் 24, 2022 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !

தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் கேசவன், தமிழ்த் திரையுலகில் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தயாரிப்பாளராக ‘வேழம்’ படம் மூலம் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 10 வருடங்களாக உதவி இயக்குனராகவும், விளம்பரப் பட இயக்குநராகவும், குறும்பட இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவமுள்ள சந்தீப் ஷ்யாம், இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வெற்றிப்படங்களை தயாரித்து, விநியோகித்த எஸ்.பி.சினிமாஸ் ‘வேழம்’ படத்தின் உலகளாவிய திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ளது. “வேழம்” திரைப்படம் ஜூன் 24, 2022 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது பன்முகத் திறமையை ஒவ்வொரு திரைப்படத்திலும், நிரூபித்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். வேழம் (யானை) விலங்கின் வலுவான நினைவாற்றலைக் தலைப்பில் குறிப்பிட்டது போல, படத்தின் கதாநாயகனும் அதே குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார். முழு திரைப்படமும் இந்த கருத்தைச் சுற்றியே சுழல்கிறது மற்றும் இந்த திரைப்படம் ஒரு அழுத்தமான திரைக்கதையை கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button