விமர்சனம்

“29” படத்தின் விமர்சனம்

ஸ்டோன்பெஞ்ச் ஸ்டூடியோ, ஜீ ஸ்குவார்டு நிறுவனங்கள் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில், விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “29”,

கதைப்படி.. சேலம் மாவட்டத்திலிருந்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 29 வயதான சத்யா ( விது ) நண்பர்களுடன் தங்கியிருக்கிறான். அவன் வயதுடைவர்கள் எல்லாம் காதலி, மனைவி என சந்தோஷமாக வாழ்ந்துவரும் நிலையில், தனது வாழ்நாளில் இதுவரை எந்தப் பெண்ணும் நம்மை பார்க்கக்கூட இல்லையே என்கிற வருத்தம் அவனை வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில் அவன் பணிபுரியும் அலுவலகத்தில் புதிதாக விஜயலெக்ஷ்மி ( ப்ரீத்தி அஸ்ராணி ) வேலைக்குச் சேர்கிறார். இவர்களது முதல் சந்திப்பே, சத்யாவின் மனதில் ஏதோ.. ஒருவித படபடப்பு ஏற்படுகிறது. நண்பர்களாக பழகுகி பின்னர் காதலர்களாக சுற்றுகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்க்கையில் உனது லட்சியம் என்ன என சத்யாவிடம் விஜி கேட்க, எந்தவிதமான சந்தோஷமும் இல்லாமல் விஜி கிடைத்ததே போதுமானதாக நினைக்க, விஜி ஐஏஎஸ் ஆகவேண்டும் அதுவே எனது லட்சியம் என்கிறார். பின்னர் இருவரும் பிரிகிறார்கள்.

மீண்டும் இவர்களது காதல் கைகூடியதா ? விஜியின் ஐஏஎஸ் கனவு நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை..

படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் 29 வயது வரை தாங்கள் கடந்துவந்த நினைவுகளை அசைபோடும் அளவுக்கு கவித்துவமான ரசனையோடு திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

நாயகன் விது முதல் பாதியில் நடிப்பில் கவனம் செலுத்திய அளவுக்கு, இரண்டாம் பாதியில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாயகி ப்ரீத்தி அஸ்ராணி காதல், சென்டிமென்ட், டான்ஸ் என தான் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் திறமையை வெளிப்படுத்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button