750 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி டீன் சந்திரிகா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இங்குள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் மாதந்தோறும் 350 பிரசவம் நடைபெறுகிறது. பிறக்கும் குழந்தைகள் எடை குறைப்பாட்டுடன் பிறந்தால் அவர்களை கண்காணிக்க, வெண்டிலேட்டர், இங்குபேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் பச்சிளங் குழந்தை அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது.
கடந்த 54 நாட்களுக்கு முன்னர் சத்து குறைப்பாட்டால் அறுவை சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. கடந்த 54 நாட்களுக்கு முன் சத்து குறைபாட்டால் அறுவை சிகிச்சை மூலம் காளையார் கோவில் அருகே மரக்காத்தூரைச் சேர்ந்த தங்கப்பாண்டி மனைவி மஞ்சுளாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
பொதுவாக பிறக்கும் குழந்தைகள் 2.50 கிராம் எடைக்கு மேல் இருந்தால் மட்டுமே குழந்தையை பிழைக்க வைக்க முடியும். ஆனால் மஞ்சுளாவிற்கு பிறந்த பெண் குழந்தை 750 கிராம் எடை மட்டுமே இருந்தது. இக்கட்டான சூழலில் பிறந்த இக்குழந்தையை பச்சிளங் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் 54 நாட்கள் வரை பராமரித்து, அதன் எடையை 950 கிராம் வரை அதிகரித்துள்ளனர்.
தற்போது தடையின்றி தாய்ப்பால் பருகும் நிலைக்கு குழந்தை வளர்ந்துள்ளது. அதேபோன்று இங்கு தருணம் பட்டியைச் சேர்ந்த அழகுமீனாள், கண்ணங்குடியைச் சேர்ந்த ஜோதி, ஆகிய இருவருக்கும் பிரசவத்தின் போது 950 கிராம் எடையிலான குழந்தைகளே பிறந்தது. இக்குழந்தைகளை மருத்துவர்கள் கண்காணித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இது குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்களின் சாதனையாக கருதப்படுகிறது. பச்சிளங் குழந்தைகள் வார்டில் மூன்று அடுக்கு சிகிச்சை தரப்படுகிறது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த 50 குழந்தைகளுக்கு நியுமோக்கால் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி முதல்முறையாக நடந்தது.
இதில், கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்திமலர் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: குறை பிரசவத்தில் 1.5 கிலோவுக்கு எடை குறைவாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொற்று நோய் பாதிப்புகள் ஏற்படும். இதனை தடுக்க நியுமோக்கால் தடுப்பூசி போடப்படுகிறது. 6, 10 மற்றும் 14வது வாரங்களில் மூன்று தவணைகளாக தடுப்பூசி போட வேண்டும்.
இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஒரு ஊசியின் விலை ₹3,900. இதனை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 50 குழந்தைகளுக்கு நியுமோக்கால் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், 469 நியுமோக்கால் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடல்நிலை பாதித்த தங்களது குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டு பயன்பெற வேண்டும், என்றார்.