தமிழகம்

“ஐயோ காப்பாத்துங்க உயிர் போகப் போகுது…” :கதறும் பொதுமக்கள்… கண்டுகொள்ளாத மருத்துவர்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் மேலும் இத் தொகுதிக்கு உட்பட்ட கிராம மக்கள் 108 வாகனத்தில் சென்று வருவதற்கும் மிகவும் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதனை சுகாதாரத்துறை கண்டுகொள்ளுமா?
திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமலும் மருந்துகள் இல்லாமல் இருப்பதாலும் நோயாளிகள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்காமல் இங்கு போதிய வசதி இல்லை. அதனால் நீங்க்ள மதுரைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்துவிட்டு ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு என ஒதுக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துவதற்கு இடமில்லாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.


இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலை நீடிக்கிறது.
இந்த மருத்துவமனையின் அவலநிலையை அறிந்து தமிழக சுகாதாரத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அரசு டாக்டர் நோயாளிகளை தரக்குறைவாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை தாக்க முற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திருமங்கலம் அருகே நக்கலக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன்(55) இவர் ஹார்ட் அட்டாக்கில் கடந்த 14ஆம் தேதி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர் முதலமைச்சர் காப்பீடு திட்ட சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் மயக்கவியல் மருத்துவர் சாலமன் மருத்துவமனைக்கு உள்ளே வந்த போது நோயாளி முருகேசனை தரக்குறைவாக பேசியுள்ளார். அருகே இருந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் விருமாண்டியையும் தரக்குறைவாக பேசி தாக்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் தகவலறிந்த செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது செய்தியாளர்களை தரக்குறைவாக பேசி தாக்க முற்பட்டார் மேலும் பொதுமக்கள் டாக்டரின் அத்துமீறலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து தலைமை மருத்துவர் பூமிநாதன், மைக்கேல், டாக்டர் சாலமனை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அதற்கும் மருத்துவ அதிகாரியிடம் டாக்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நோயாளி முருகேசனின் உறவினர் ராஜேந்திரன் அவருக்கு உணவு கொடுக்க வந்தபோது அவரிடம் தகராறு செய்துள்ளார் மேலும் மருத்துவர் நான் ரவுடி எனக் கூறி தாக்க முற்பட்டுள்ளார் இதனால் பொதுமக்கள் மற்றும் மருத்துவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர் இது பற்றி உறவினர் ராஜேந்திரன் கூறுகையில் நோயாளிடம் அன்பாக பேசி கருணை உள்ளத்தோடு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் தரக்குறைவாகப் பேசியதோடு தாக்க முற்பட்டுள்ளார் மேலும் இப்படிப்பட்ட மருத்துவர் இருந்தால் நோயாளிகள் உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும் அதனால் இவரை பணியிடை நீக்கம் அல்லது வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

-பா.நீதிராஜபாண்டியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button