தமிழகம்

சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை உடைத்து பணம், பொருள் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காமராஜபுரம் பகுதியில் பொன்ன மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவருக்குச் சொந்தமான சீனிவாசா சூப்பர் மார்க்கெட்டில் இரவில் மர்ம நபர்கள் கட்டிடத்தின் மேற்கூரை பகுதியை உடைத்து பணம் பொருட்களை கொள்ளையடித்து கைவரிசையை காட்டியுள்ளனர்.
ரகுபதி இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சேர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் கடையை பிரபா என்ற பெண் மேற்பார்வையில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ 11/2லட்சம் பணம் மற்றும் ஆயிரக்கணக்கான பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கையாடல் செய்துள்ளனர். மேலும் இக்கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். கொள்ளையர்கள் நூதனமாக கேமராவிற்கு பொருத்தப்பட்டிருந்த டிவி மற்றும் கேமராவின் காட்சிகளை பதிவு செய்யும் மின் சாதன பொருட்களையும் சேர்த்து தெளிவாக திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் காலை வழக்கம் போல் பிரபா சக ஊழியர்களுடன் கடையை திறந்து வியாபாரம் செய்ய வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரையை உடைத்து பணம் பொருட்கள் கொள்ளை அடித்தது தெரியவந்தது இதில் ஆச்சரியத்தில் அதிர்ந்துபோன பிரபா உடனடியாக ரகுபதியின் சகோதரன் ரங்கராஜ் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரெங்கராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பணம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார்க்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் அடிப்படையில் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இதில் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் மூன்று லட்சத்திற்கும் மேல் உள்ள பொருட்கள் மின்சார உபயோகப் பொருட்கள் ஆகியவை திருடுபோனது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் திருமங்கலம் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தடயவியல் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இதே பாணியில் திருமங்கலம் நகரில் அம்மன் ஸ்டோர் பிரபல பாத்திர ஸ்டோர் ஆகிய கடைகளில் கொள்ளை அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமங்கலம் நகர் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் இரவு நேர ரோந்து பணிக்கு ஒரே ஒரு காவலர் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில் திருடர்களை பிடிப்பதற்கும் இரவு நேர ரோந்து பணிக்கு காவலர் பற்றாக்குறை இருப்பது குறிப்பிடத்தக்கது இப்பகுதி மக்கள் காவலர்கள் ரோந்து பணியை பலப்படுத்தி தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி கோரிக்கை முன்வைத்துள்ளனர் இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் நகர் போலீசார் கொள்ளையர்களை பிடிக்கதனிப்படை அமைத்து விசாரனை மேற்கொண்டு தேடிவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button