அரசியல்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு !

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் பதவியேற்றனர்.
நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்ற நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் சபாநாயகர் தனபால் அறையில் முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
அதிமுகவில் ஏற்கனவே சபாநாயகர் உட்பட 114 உறுப்பினர்கள் உள்ள நிலையில் தற்போது பதவியேற்கும் 9 சட்டமன்ற உறுப்பினர்களுடன் மொத்தமாக சட்டப்பேரவையில் அதிமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்கிறது.
வெற்றிபெற்ற திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றதை தொடர்ந்து சட்டப்பேரவையில் காலியாக இருந்த அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதையடுத்து திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 88லிருந்து 101 ஆக உயர்ந்துள்ளது. இதனை தவிர்த்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி சார்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என மொத்தமாக திமுக கூட்டணியின் எண்ணிக்கை 110 ஆக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நாங்குனேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாங்குனேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் பதவிஏற்றதை ஏராளமான நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button