அரசியல்

ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தி.மு.கவினர் மோதிக் கொண்டனர். முதுகுளத்தூர் தொகுதி திமுக கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் காதர் பாஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் சுப தங்கவேலனின் ஆதரவாளர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தற்போதைய மாவட்டச் செயலாளர் காதர் பாஷா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்களை நோக்கி தங்கவேலனின் ஆதரவாளர்  மேடையை மறைத்து நிற்க வேண்டாம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.

இதுசம்பந்தமாக இருதரப்பினரையும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுக தலைமை சென்னைக்கு வரவழைத்து கண்டித்து அனுப்பி இருப்பதாக தெரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button