அரசு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட தனியார் பள்ளி : தூங்கும் மெட்ரிக் ஆய்வாளர்…
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியீட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் இயங்கும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயின்று நன்கு மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளின் புகைப்படங்களை பிளக்ஸ் பேனர்கள் வைத்து விளம்பரம் செய்ய கூடாது எனவும் பள்ளி கல்வித்துறை சார்ந்த பல்வேறு அரசு விதிமுறைகளை தனியார் பள்ளிகளுக்கு விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மாலையீடு அருகே உள்ள மைனாரிட்டி தனியார் பள்ளியான மவுண்ட் சியோன் தனியார் மேல்நிலைப் பள்ளி நகராட்சி முழுவதும் 10க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்து விளம்பரம் செய்து வருகிறது.
அரசு அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளவில்லை.. இதுகுறித்து விசாரித்தபோது, இந்த மைனாரிட்டி மவுண்ட் சியோன் மேல்நிலைப் தனியார் பள்ளி நிர்வாகிகள் எங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மேலிடம் அளவில் ஆட்கள் உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையனிடம் தாங்கள் எது சொன்னாலும் நடக்கும் எனவும் கூறி அரசு அதிகாரிகள், பள்ளி கல்வி துறை அதிகாரிகளை மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
மேலும் இந்த தனியார் பள்ளியில் அரசு விதிமுறைகளை மீறி பள்ளியின் கட்டிடங்கள் அமைந்துள்ளன எனவும் 4500 க்கும் அதிகமாக மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்டத்தில் மெட்ரிக் ஆய்வாளர் முதல் அனைத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் வரை சரி செய்து பணம் பட்டுவாடா செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
ஆகவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இவர்களின் முறைகேட்டிற்கு துணைபோகிறாரா? அல்லது அவரது பெயரை இவர்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதை விசாரித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இந்த பள்ளி விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– மு.சரவணக்குமார்