பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிடவேண்டாம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்பு !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிட வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வரவேற்கிறது.
மேலும் மாணவரின் டி.சி.யில் வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்பதையும் தவிர்த்தல் நன்று. இந்நடவடிக்கை எதிர்காலத்தில் சாதிகளில்லா சமுதாயம் அமைந்திடவும், மாணவர்களின் மனநிலையை மாற்றிடவும் வழிவகுக்கும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணையின் படி பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தபட்டு இந்த நல்ல திட்டத்தை நிறைவேற்றிய கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.