விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை கலக்கும் பிரபல ரவுடி அஜித் : காவல்துறை கைது செய்ய தயங்குவது ஏன்?
காவலர்களை அரிவாளால் விரட்டும் பலே ரவுடி அஜித். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதிக்குட்பட்ட அம்மன் பட்டியை சேர்ந்த அஜித் இவன் வழிப்பறி திருடன். இவன் மீது கோவை விருதுநகர் திருச்சி காவல் நிலையம் மற்றும் பல இடங்களில் வழக்குப்பதிவு உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவன் மீது ஏற்கனவே 3 குண்டாஸ் வழக்கும் பதியப்பட்டுள்ளதாக காவல் துறையினரால் கூறப்படுகிறது. மேலும் இவன் மீது கடந்த மாதம் திருச்சுழி பகுதியில் 3 வழிப்பறி நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டு திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிய தயங்குவது ஏன் இவனுக்கு ஆளும் கட்சி பிரமுகர் உதவி இருப்பதால் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் கண்டுகொள்ளவில்லை என காவல்துறை வட்டாரத்தில் புகார் கசிந்து வருகிறது. இந்நிலையில் இவனை கைது செய்ய அம்மன் பெட்டிக்கு விரைந்து சென்ற திருச்சுழி போலீசாரை இவருடைய சக நண்பர் முத்துக்குமார் மற்றும் அஜித் பிற நண்பர்களுடன் சேர்ந்து துணை கண்காணிப்பாளர் வாகனம் மற்றும் காவலர்களை கற்களைக் கொண்டு வீசுவதும் அரிவாளால் விரட்டுவதும் போன்ற குற்றச் செயலை கையாண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மௌனம் சாதிப்பது குற்றவாளிக்கு உடந்தையாக இருப்பது போல் தெரிகிறது.
நியாயமாக பணிபுரிய நினைக்கும் திருச்சுழி காவல் நிலைய போலீசார் மற்றும் துணை கண்காணிப்பாளர் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் அவனைப் பிடிக்க முடியாமல் குமுறுகின்றனர். குற்றவாளிக்கு மாவட்ட கண்காணிப்பாளர் துணையாக இருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இவனைப் போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளியை முளையிலேயே கிள்ளி எறிந்தால் பெரும் குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். அஜித் என்ற ரவுடி மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. கைது செய்வார்களா விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் திருச்சுழி போலீசார். மேலும் இவன் மீது கமுதி பகுதியிலும் வழிப்பறி சம்பவம் குற்ற வழக்கு பதியப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவன் குற்றம் செய்வதற்கு ஏதுவாக ஒருபுறம் ராமநாதபுரம் மாவட்ட பகுதி இன்னொருபுறம் விருதுநகர் மாவட்ட பகுதி இதனால் காவல்துறை எல்லை பிரச்சினை உள்ளதாகவும் இவன் இதனை பணயமாக வைத்து கொண்டு அங்கும் இங்கும் போலீசாரை அலைக்கழிப்பதையே சாமத்திய வழக்கமாக வைத்துள்ளான். இரு மாவட்ட போலீசாரும் ஒன்றிலிருந்து பிடிக்க திட்டமிட்டால் காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டு மாவட்டத்தை விட்டு தப்பி ஓடுகிறான் இவனைப் போன்ற குற்றவாளிகளுக்கு கை விலங்கு பூட்டி நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கினால் மட்டுமே திருந்த வாய்ப்பு உள்ளது.
- பா.நீதிராஜபாண்டியன்