தமிழகம்

பல கோடி மதிப்புள்ள நுங்கம்பாக்கம் APVP கோவில் சொத்து ஸ்வாகா

பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் மோசடி செய்து பத்திரம் பதிவு செய்த கோவில் நிலம் மீட்கப்படுமா?

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவடி திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் ஆலய முன்னாள் பரம்பரை அறங்காவலர் P.S.மாசிலாமணி. (இரண்டு ஆண்டுக்கு முன்னர் இறக்கும் வரை மேற்கண்ட பதவி வகித்தவர்), இவர் பூவை அருகில் உள்ள சென்னீர்குப்பம் கிராமத்தில் பெரும் செல்வந்தர். இவருடைய இரண்டு சகோதரிகளும் நுங்கம்பாக்கம் APVP தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்கள் கல்யாணராகவன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை திருமணம் செய்துள்ளார்கள்.
மேற்கண்ட மாசிலாமணி அவர்கள் நுங்கம்பாக்கம்
APVP தேவஸ்தான நிலத்தில் வாடகை தாரராக இல்லாமல் நீதிமன்றத்தில் வாடகை தாரர் என தவறான தகவல் அளித்து (மோசடி செய்து) 625 சதுர அடி நிலத்தை பத்திரம் பதிவு செய்துள்ளார். (இன்றைய மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும்) பத்திர என் 203/1985, Dt. 09.05.1985.. மேற்கண்ட நிலத்தை மோசடி செய்து இவர் பெயருக்கு வாங்கிய சில மாதங்களில் இவருடைய மைத்துனர் தற்போதைய நுங்கம்பாக்கம் கோவில் அறங்காவலர் ராதாகிருஷ்னனுக்கு விற்பனை செய்து விட்டார். பத்திர என் 504/1985, Dt. 18/10/1985

மேற்கண்ட இரண்டு பத்திரமும் மத்திய சென்னை மாவட்டம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. (Chennai Central Joint II)  விற்பனை செய்யப்பட்ட இடம் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் பரம்பரை அறங்காவலர் வள்ளியம்மாள் ராஜபாதர் குடியிருந்த வீட்டின் ஒரு பகுதி. (தற்போதைய பரம்பரை அறங்காவலரின் தாயார் வாசித்த கோவில் வீடு). முன்னாள் பரம்பரை அறங்காவலர் வள்ளியம்மாள் ராஜபாதர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் (செ.மு.ந.க. எண். 13476/அ1, நாள் 31.03.2001) இந்த மோசடி குறித்து தெளிவாக குறிப்பிட்டு இருந்தும் இதுவரை மேற்கண்ட கோவில் சொத்தின் மீது அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
திட்டமிட்டு பரம்பரை அறங்காவலர் வள்ளியம்மாள் ராஜபாதார் குடி இருந்த வீட்டின் ஒரு பகுதி வாடகைதாரர் என தவறான தகவல் நீதிமன்றத்தில் அளித்து தனது உறவினர் பெயரில் பத்திரம் கிரயம் செய்து மீண்டும் தன் மகன் பெயருக்கு பத்திரம் கிரயம் செய்து மோசடி செய்து கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ள இரண்டு கோவில் பரம்பரை அறங்காவலர்களையும் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்து விட்டு கோவில் சொத்தை மீட்டு எடுக்க வேண்டும்.

நுங்கம்பாக்கம் APVP தேவஸ்தான நிலம் சுமார் 250 நபர்களுக்கு Section 9 ல் (Madras City Protection Act) ன் படி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிலம் பதிவு செய்தவர்களில் 2 பேர் மட்டும் மேற்படி தேவஸ்தான ஆவணத்தில் (DCB)ல் வாடகைதாரர் கிடையாது.
இருவரும் பரம்பரை அறங்காவலரின் மைத்துனர்கள் 1.P.S.மாசிலாமணி 2.P.S.சொர்ணலிங்கம்
இருவரும் கோவில் நிலத்தில் வாடகைதாரர் என தவறான தகவல் அளித்து நீதிமன்றத்தை ஏமாற்றி கோவில் சொத்தை மோசடி செய்து கிரையம் செய்துள்ளார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button