மாவட்டம்
உடுமலைப்பேட்டையில் “மழை உடுமலை” சார்பில் பனை விதை நடும் விழா !

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சியில், பெருமாள் புதூர், அணைக்கட்டு குமணன் துறை பகுதியில், மழை உடுமலையின் 160 வது தொடர் வாரம், 180 வது நிகழ்வாக தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மற்றும் மழை உடுமலை இணைந்து, ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் தொடர் நிகழ்வு நடைபெற்றது. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி தலைமையில், பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உடுமலை தமிழிசை சங்கம் செயலருமான சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டையில் உள்ள பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




