திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீரால், வாகன ஓட்டிகள் அவதி !
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்கின்றனர். இவ்வழியாக அப்பகுதியினர் இருசக்கர வாகனங்களில் அதிகளவில் செல்வது வழக்கம்.
இந்நிலையில் பிரட் & பட்டர் என்ற கடைக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ்பகுதியில் கழிவுநீர் சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு கடந்து செல்கின்றனர்.
இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வழிந்தோடும் சாக்கடை கழிவுகளை அகற்றி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கா.சாதிக்பாட்ஷா