ஆபாசத்தை தடுக்காமல், ரசித்தவர்களை அடித்து உதைத்த காவல்துறையினர்

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி சில தினங்களில் கோவில் திருவிழாவில் ஆபாசமாக நடனமாடியும், ஆபாசமாக பேசியும் நிகழ்ச்சி நடந்துள்ளது. ஏற்கனவே ஆபாசத்தை தூண்டும் வகையில் அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடிக் கூடாது, ஆபாச வார்த்தைகளை உபயோகிக்க கூடாது, முக கவசம் அணியவேண்டும் என பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ராஜம் பட்டி கிராமத்தில் (11/05/2022) ஆடல் பாடல் நிகழ்ச்சி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கீரனூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சியில் அரைகுறை ஆடைகளுடன் நடனப் பெண்களின் ஆபாச நடனம்,செய்கைகள் என நீதிமன்ற வரைமுறைகளை மீறியதோடு, உச்சபட்சமாக குறிப்பிட்ட மக்களை குறிக்கும் பாடல் ஒளிபரப்பியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. முகக் கவசம் ஒருவர் கூட அணியவில்லை இத்தகைய விதிமீறல்களை பொறுமையாக பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்த உதவி ஆய்வாளர் ஒருவர் நடனத்தை கண்டு கை தட்டும் மக்களையும், விசில் அடிப்பவர் களையும் கெட்ட வார்த்தைகளில் வசை பாடியது பொதுமக்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.ஆடல் பாடல் தடை செய்யப்பட்டிருந்ததால் பல்வேறு நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருந்ததை கருத்தில் கொண்டு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி யிணையும், நிபந்தனையையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது காவல்துறையினர் கடமையாகும் . ஆபாச நடனங்களை தடுத்து நிறுத்தாது , அதைக் கண்டு ஆரவாரம் செய்பவர்களை, அடித்து ,உதைத்து, வசைபாடுவது சமூக சீரழிவை தடுக்க போவதில்லை, நீதிமன்ற நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியதாக அதற்கு அர்த்தமும் இல்லை.
ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டிருந்ததால் பல்வேறு நடன கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருந்ததை கருத்தில் கொண்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதிமன்ற அனுமதியிணையும், நிபந்தனையையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது காவல்துறையினரின் கடமையாகும். ஆபாச நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினர், அதைக் கண்டு ரசித்து ஆரவாரம் செய்பவர்களை, அடித்து ,உதைத்து, வசைபாடுவதால் சமூக சீரழிவை தடுத்ததாக பொருள்படாது. நீதிமன்ற நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியதாக அதற்கு அர்த்தமும் இல்லை.
தி.கார்வேந்தபிரபு.