பரமக்குடி அருகே.. த.வெ.க மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு !

தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளருக்கு பார்த்திபனூரில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பணிகளை செய்வதற்காக தமிழகம் முழுவதும் 120 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளை அடக்கி ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் மேற்கு மாவட்ட செயலாளராக மன்மதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு மாவட்ட செயலாளர் மன்மதனுக்கு பார்த்திபனூரில் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜேசிபி வாகனத்தின் மீது நின்று கொண்ட தொண்டர் ஒருவர் பூக்களை தூக்கி வீசி வரவேற்பு அளித்தார். பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தீஸ்வரன், மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் பூமாலைகள் அணிவித்தும், பூக்களை தூக்கி வீசியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
—–