கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட EX காவலர் உள்ளிட்ட நான்கு பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் அபராதம்
திண்டுக்கல்லில் பாறைமேட்டு தெருவில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த காவலர் அருண்குமார், சுரேஷ், சேலத்தை சேர்ந்த யோகராஜ், அஜித்குமார் ஆகிய நான்கு பேரையும் திண்டுக்கல் நகர் தெற்கு காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 72 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால்
போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்ததும் காவலர் அருண்குமார், சுரேஷ், யோகராஜ், அஜித்குமார் ஆகிய நான்கு பேருக்கும், தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1 லஞ்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-கே.எம்.எஸ்