மாவட்டம்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலி சிபிசிஐடி போலீஸ் கைது !

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே ஒருவர் குடிபோதையில்  வாக்கி டாக்கி வைத்துக்கொண்டு  தான் தேனி சிபிசிஐடி போலீஸ் என்று கூறி, சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.

அவரது செயல்பாடுகளில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை புகைப்படம் எடுத்து தேனி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் கொடுத்த தகவலின் பேரில், வீரபாண்டி, பவுன்ராஜ், கணேசன் ஆகிய காவலர்கள் அவரை நேரில் சென்று விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் போலி என தெரிய வந்ததுள்ளது. மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த வீனஸ் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button