துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு !
தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செஞ்சி மஸ்தான், மணோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் ஆகியோர் நாளை மாலை 3.30 மணியளவில் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். நாளை முதல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக செயல்படுவார் என்றும் ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையோடு, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அமைச்சர்களின் இலாக்காகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொன்முடிக்கு வனத்துறை, தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் காலநிலை மாற்றம், கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாடு, ராஜ கண்ணப்பனுக்கு பால் வளம், மெய்யநாதனுக்கு பிற்பட்டோர் நலத்துறை, மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.