“மழை பிடிக்காத மனிதன்” நிகழ்ச்சி ரத்து ! உண்மையும், பின்னணியும் !
மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் நேற்று வெளியாகி, பார்வையாளர்கள் யாரும் தியேட்டருக்கு வராத நிலையில், படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் படத்தின் முதல் காட்சி தனக்குத் தெரியாமல், தயாரிப்பாளர் சேர்த்துள்ளார். அந்தக் காட்சி படத்தின் கதையை முன்கூட்டியே விளக்குவதாக இருந்ததால் நான் சேர்க்காமல் வைத்திருந்தேன். எனது அனுமதி இல்லாமல், எப்படி தயாரிப்பாளர் அந்தக் காட்சியை சேர்த்தார் என்பது தெரியவில்லை என பேசியிருந்தார்.
அந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில், தயாரிப்பாளர் விளக்கம் அளிப்பதாக இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக சினிமா வட்டாரங்களில்.. ஒரு திரைப்படம் தனிக்கை சான்றிதழ் பெற்ற பிறகு, அந்தப் படத்தில் எந்த ஒரு காட்சியையும் சேர்க்கவோ, நீக்கவோ முடியாது என்பது இயக்குநருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் இந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு யாரும் வராததால், அவர் இதுபோன்ற வீடியோவை வெளியிட்டு, படத்தை விளம்பரப்படுத்த முயன்றிருக்கிறார். இது ஏமாற்று வேலை எனத் தெரிந்தும், படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த இருக்கின்றனர் என பேசி வந்தனர்.
ஆகையால் தயாரிப்பாளர் தரப்பினர், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அவர்கள் கேட்கும் ஏடாகூடமான கேள்விகளை, தவிர்க்கும் விதத்தில், 12 மணிக்கு நடைபெறவிருந்த நிகழ்வை, 12.10 மணிக்கு ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.