TFPC திசை மாறிய தேர்தல் ! களமிறங்கும் விஷால் ! ஓட்டம் பிடிக்கும் தாணு !.?
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை அடுத்து முரளி, மன்னன் அணியினர் தீவிரமாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முரளி இதுவரை எந்த தயாரிப்பாளர் வீட்டிற்கும் சென்று தனக்கோ அல்லது தனது அணியினருக்கோ வாக்குகள் கேட்கவில்லை. அவரது கவனம் முழுவதும் அவரது அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் இருவரையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே என்கிறார்கள் அவரது தரப்பினர்.
இது சம்பந்தமாக முரளி குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும்போது.. இந்த தேர்தல் தற்போது விஷாலை நோக்கிச் செல்கிறது. எது எப்படியானாலும் எனக்கு ஒன்றுமில்லை, என சங்கடத்தோடு பேசியிருக்கிறார். மேலும் இதுசம்பந்தமாக விஷால் தரப்பினரை தொடர்பு கொண்டபோது… இன்று ( 12.4.2023 ) மன்னன் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் கமிலா நாசர் விஷாலை சந்தித்து ஆதரவு கேட்க அணியினருடன் வருவதாகக் கூறினாராம். மன்னன் வரவேண்டாம் நீங்கள் வாருங்கள் என விஷால் கூறியிருக்கிறார்.
இன்று நடைபெற இருக்கும் விஷால், கமிலா நாசர் சந்திப்பில் அவரது நிலைப்பாட்டை தெரிவிப்பதோடு, கல்பாத்தி அர்ச்சனா, கமிலா நாசர் இருவருக்கும் வாக்குகள் கேட்டு வீடியோவும் வெளியிட இருக்கிறாராம். மேலும் தனது ஆதரவாளரைத் தொடர்பு கொண்டு முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அர்ச்சனா, மன்னன் அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் கமிலா நாசர் இருவருக்கும் நமது ஆட்களிடம் வாக்களிக்கச் சொல்லுங்கள் என பேசியிருக்கிறார்.
தலைவர் பதவியை பொறுத்தவரை இருவரும் விஷாலுக்கு எதிரான மனநிலையில் செயல்பட்டதால், தீவிரமாக யோசித்து வருகிறாராம். தாணுவை தீயசக்தி என்று நிரூபித்துத்தான் விஷால் தலைவரானார். அந்த தாணு இன்று முரளிக்கு ஆதரவாக இருப்பதோடு, லைகா தமிழ்குமரனை கொண்டு வந்திருக்கிறார். இதோடு முரளிக்கு விஷாலின் “கதக்களி” படம் வெளியிட்டதில் மூன்று கோடி தரவேண்டியிருக்கிறதாம். இதனால் முரளிக்கு எப்படி விஷால் ஆதரவு தெரிவிக்க முடியும் என்கிறார்கள்.
முரளி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியுடன் நெருக்கமாக இருப்பது போலவும், உதயநிதியின் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது எனவும் பேசி வருகிறாராம். ஆனால் ஆளூம்தரப்பினர் இந்த தேர்தலில் முரளிக்கு ஆதரவாக தலையிட விரும்பவில்லை என தெரிவித்து விட்டனராம். இதற்கு மாற்றாக மன்னன் தரப்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒருவரது வங்கிக் கணக்கில் ஐந்து லட்சம் ரூபாய் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தர் செலுத்தியிருக்கிறார். இதை சம்பந்தப்பட்ட நபரே காண்பிக்கிறார் என்றால் ஆளும் தரப்பினர் ஆதரவு முரளிக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரியவருகிறது என்கிறார்கள்.
விஷால் இந்தத் தேர்தலில் தலையிடுகிறார் என்கிற தகவல் தெரிந்தவுடன், இரு அணியினரும் கலந்து ஜெயிக்க வேண்டும் என விஷால் விரும்புவார். இனி நமது எண்ணம் நிறைவேறாது, ஏற்கனவே எஸ்.ஏ. சந்திரசேகர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். விஷாலும் தலையிட்டால் நமது பொழப்பு அவ்வளவுதான். இனி ஒதுங்கி இருக்கலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாராம் தாணு. முரளியைப் பொறுத்தவரை எது நடந்தாலும் பரவாயில்லை. நாம் ஃபிலிம் சேம்பரில் தலைவராகிவிடலாம் என்கிற மனநிலையில் இருக்கிறாராம்.
முரளியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக்கிவிட்டால் நாம் ஃபிலிம் சேம்பர் தலைவராகிவிடலாம் என்கிற கனவில் இருந்த தாணுவின் நிலைமை..?.?.?
இது சம்பந்தமான விரிவான செய்தி வரும் இதழில்….