டப்பிங் யூனியன் உறுப்பினர்கள் செலுத்திய பலகோடி ரூபாய் ஸ்வாகா..! : சிக்கலில் ராதாரவி!!
தென்னிந்திய டப்பிங் யூனியன் சங்கத்தில் பல ஆண்டுகளாக பதவி சுகம் அனுபவித்து வருபவர் ராதாரவி. இதே போல நடிகர் சங்கத்தில் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் பதவியில் இருந்த ராதாரவியை விஷால் தலைமையிலான அணி மண்ணை கவ்வ வைத்தது.
அதோடு நடிகர் சங்கத்துக்கு இலவசமாக வந்த வேங்கட மங்கலம் நிலத்தை மோசடியாக விற்று ஏமாற்றிய விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்ததோடு ராதாரவி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் அந்த மோசடி வழக்கில் தனக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என தெரிந்ததால் தன்னை பாதுகாத்துக் கொள்ள மத்தியில் ஆளும் பிஜேபியில் போய் சேர்ந்து கொண்டார் ராதாரவி.
இந்த நிலையில் டப்பிங் யூனியன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி மனு செய்தார். அவரை எதிர்த்து பிரபல பின்னணி பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி மனுத்தாக்கல் செய்தார்.
எப்போதும் போல தன்னை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருந்த ராதாரவிக்கு சின்மயி வேட்புமனு தாக்கல் செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரணம் சின்மயி கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்பதால் அப்படி அவர் வெற்றி பெற்றால் ஒரு பெண்ணிடம் தோற்றுப்போன ராதாரவி என வரலாற்றில் இடம் பெற்று விடுவோமே என பதறிய ராதாரவி வழக்கம் போல அவருக்கு மட்டுமே பயன்படும் டப்பிங் யூனியன் சட்டவிதிகளை காரணம் காட்டி சின்மயி வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வைத்தார்.
மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் சின்மயி வழக்கு தொடர்ந்தார்.
ராதாரவிக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருதலைபட்சமாக சின்மயி வேட்புமனுவை தள்ளுபடி செய்திருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சொல்லி ராதாரவி தன்னிச்சையாக வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவு வாங்கி மீண்டும் தேர்தலில் நிற்க சின்மயி தரப்பு முயற்சி எடுக்கிறது.
இந்த நிலையில் ராதாரவி அணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பேசிய ராதாரவி மிகுந்த பதட்டமாக அதே நேரம் பதவி கைவிட்டு போய்விடுமோ என்ற அச்ச உணர்வோடே எதிரணியினரை அவமரியாதையாக மேடை நாகரீகம் அற்ற வகையில் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேச அதையும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டம் கை தட்டி ரசித்தது.
இந்த நிலையில் யூனியன் தேர்தலில் ராதாரவி அணி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் சொல்வாரா…
தேர்தலை நேர்மையாக எதிர்க்கொள்ளும் தைரியம் ராதாரவிக்கு இல்லை என்பதால்தான் சின்மயி வேட்புமனுவை விதிமுறைகளை மீறி தள்ளுபடி செய்து தன்னை தலைவராக அறிவித்து கொண்டது…
தொலைபேசிகளை மாற்றி ஒரு லிஸ்ட்.. தொலைபேசி எண்கள் இல்லாமல் ஒரு லிஸ்ட். உறுப்பினர் முகவரி இல்லாத டப்பிங் ஆர்டிஸ்ட் லிஸ்ட்.
ஓட்டளிக்க தகுதி இல்லாத நூற்றுக்கணக்கான நபர்களை உறுப்பினர் என்று பொய் சொல்லி பட்டியலில் சேர்த்திருப்பது. ராதாரவி வீட்டில், தனியாக 3, 4 Print out list வைத்துக்கொண்டு 4 பேரை வீட்டிற்கு வரவழைத்து அங்கிருந்து அந்த லிஸ்டை பார்த்து phone செய்ய வேண்டுமாம். அதுவும், வருபவர்கள் phoneகளில் அவர் வீட்டிலிருக்கும் பட்டியலை phone எடுக்க கூடாதாம்.
ராதாரவி கொடுக்கும் வேறு ஒரு phoneல் தான் பேச வேண்டும் என்ற கண்டீஷன் வேறாம்…
நேர்மையாக போட்டியிட்டால், 50 ஓட்டுக்கள் கூட ராதாரவியால் டப்பிங் சங்கத்தில் வாங்க முடியாது. அதனால் தான் சின்மயியை போட்டியிட அனைத்து தகுதி இருந்தும் நிராகரிக்க சொல்லியிருக்கிறார். தேர்தல் அதிகாரி மீது எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. ஆரம்பம் முதலே அவர் ஒருதலை பட்சமாக நடந்துக்கொள்கிறார் என்கிறார்கள்.
இதற்கு ராதாரவியே தன்னை தேர்தல் அதிகாரி என்று சொல்லிவிட்டு போயிருக்கலாம் என்கிறார்கள். ராதாரவி தேர்தல் அதிகாரியாக இருந்தால் எப்படி நடத்துவாரோ அப்படியே எல்லாம் இப்போது நடந்து முடிந்திருக்கிறதாம். ராதாரவி இனியாவது திருந்தி பதவி விலகிச் செல்வது அவருக்கு அழகு, மரியாதை.
இல்லையேல் நேர்மையாக தேர்தலை நடத்த சொல்லுங்கள். தோற்று அவராக வெளியேறுவார் என்கிறார்கள் ராதாரவியை எதிர்த்து போட்டியிடும் ராமராஜ்ஜியம் அணி.
ஏற்கனவே நடிகர் சங்கத்திலும் இதே போல பல ஆண்டுகளாக ராதாரவி தன்னிச்சையாக செலுத்தி வந்த அதிகாரத்தை விஷால் அணி தட்டிக்கேட்டு மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது அதே போல டப்பிங் யூனியனிலும் மாற்றம் வருமா… !
டப்பிங் யூனியனில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் ராதாரவி சமர்பித்த ஆண்டறிக்கையில் 45 பேர் புதிய உறுப்பினர்கள் ஆக யூனியனில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே ஆண்டில் தொழிலாளர் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட டப்பிங் யூனியன் படிவத்தில் 75 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டப்பிங் யூனியனில் ஒரு உறுப்பினர் சேர்க்கைக்கு சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்களாம். ராதாரவி கொடுத்த கணக்கின்படி சுமார் ஒரு கோடிக்கு மேல் வருவாய் வந்துள்ளதாம். இது மட்டுமல்லாமல் உறுப்பினர்கள் சம்பளத்தில் 10 சதவீதம் கமிஷன் பிடித்தம் செய்த வகையில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கு மேல் வருவாய் வந்துள்ளதாம்.
இத்தனை கோடி ரூபாய் வருவாய் வந்தும் இப்போது சங்க வங்கி இருப்பு சில லட்சங்கள்தானாம். அப்படியானால் உறுப்பினர்களிடம் வசூலித்த கோடிக்கணக்கான ரூபாய் என்ன ஆனது? இந்த கேள்விக்கு ராதாரவி மட்டுமே பதில் சொல்ல முடியும் என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.
- கோடங்கி