வயநாட்டிற்கு 10 பொக்லைன் இயந்திரங்கள், 30 பிரீசர் ஃபாக்ஸ் அனுப்பிய கோவை மாநகராட்சி !
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளில் மீட்பு பணிகளுக்கு உதவும் வகையில் கோவையில் இருந்து 10 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க ப்ரீசர் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடுமையான நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் வயநாடு பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து மீட்பு பணி உள்ளிட்ட அனைத்து வகையிலும் உதவிகள் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன் படி கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆலோசணையின் பேரில், மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் வேண்டுகோளுக்கு இணங்க, கோவையிலிருந்து பொக்லைன் இயந்திரங்கள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.அதன்படி,கோவையிலிருந்து மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் 10 பொக்லைன் வாகனங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க 30 பிரீசர் பாக்ஸ்கள் (freezer box) மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் முன்னிலையில் இவை அனைத்தும் வயநாட்டிற்கு அனுப்பபட்டது. இதில் கோவை மாநகராட்சி ஊழியர்களும் மீட்புபணிகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர்.
– ஜான்