தமிழகம்

கொள்ளையடித்த பணத்தில் 4 கோடியில் ஸ்பின்னிங் மில் மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்த திருடன் ! கோவையில் பரபரப்பு !

தமிழகம் முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள குடியிருப்பு பகுதிகளில், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து போலீசாரிடம் சிக்காமல் ஏமாற்றி வந்த பலே கிள்ளாடியை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய மூர்த்தி, விருதுநகர் மாவட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பிளான ஸ்பின்னிங் மில் வாங்கியுள்ளார். மேலும் பேருந்து நிலையம் அருகே 53 செண்ட் நிலம் வாங்கியுள்ளாராம்.

கோவையில் கடந்த இரண்டு வருடங்களாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ராட்மேன் (எ) மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகரத்தில் மட்டும் 18 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் தமிழ்நாடு முழுவதும் 68-கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இதில் மூர்த்தியிடன் அம்சராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மூர்த்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர், இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொள்ளை சம்பவங்களில்  ஈடுபட்டு வந்துள்ளார். இதுவரை எங்கும் சிக்காமல்,  முதல்முறையாக இப்போது தான் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை சம்பவத்திற்கு இரும்பு ராடு மற்றும் ஒரே மாதிரியான சட்டையை பயன்படுத்துவதால் இவரை ராட்மேன் என்கிறார்கள்.

ஒட்டன்சத்திரம் மற்றும் ராஜபாளையம் பகுதியில் தலா 50 சவரன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்குகளில் தொடர்புடையவர். இவருடன் ஏழு நபர்கள்  இவரது கூட்டத்தில் உள்ளதாகவும், அந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் மூர்த்தி தான் என்கிறார்கள்.

இவர் கொள்ளை சம்பவங்களில் தனியாகவம், கூட்டமாகவும் செயல்படுவார். எந்த வீடுகளில் ஆள் நடமாட்டமும், வாகனங்களும் குறைவாக உள்ளதோ அந்த வீடுகளை குறிவைத்து கொள்ளையடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். வீடுகளில் ஆட்கள் இருந்தால் அவர்களை கட்டிப் போட்டுவிட்டு கொள்ளை அடித்துள்ளார்கள்.

இதேபோல் சிங்காநல்லூரில் கட்டிப்போடு கொள்ளையடித்தது இவரது கும்பல் தானாம். அந்த வீட்டில் கொள்ளையடித்த 63 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்  4.5 கோடி மதிப்பில் ராஜலட்சுமி ஸ்பின்னிங் மில் ஒன்றை கொள்ளையடித்த பணத்தில் வாங்கி நடத்தி வருகிறார். இதுசம்பந்தமாக மனைவி மற்றும் சுரேஷ் என்பவரையும் ராஜபாளையம் போலீசார்  கைதுசெய்து விசாரத்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதாவது ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி மக்கள் வசித்துவரும் பகுதிகளில் கொள்ளையடித்துள்ளனர். வீட்டில் உள்ளவர்களை கட்டிப் போடும் இடங்களில், வெவ்வேறு மொழிகள் மற்றும் சைன் லாங்குவேஜ் சைகைகளை கொள்ளையடிக்கும் போது பயன்படுத்துவார்கள். இந்த கும்பல் மாஸ்க் அணிந்தபடி இருந்த புகைப்படத்தை வைத்து வரைந்த ஓவியம் தான் இவர்களை பிடிப்பதற்கு உதவியாக இருந்துள்ளது. சிசிடிவியில் பதிவான கண் மற்றும் அவரது உடல்மொழிகளை வைத்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் எப்போதும் பேருந்தில் மட்டுமே பயணம் செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இரண்டு கார்கள், ஆறு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தோராயமாக இவர்கள் கொள்ளையடித்த நகைகள் மட்டும் 1500 சவரன் இருக்கும். அதில் கோவையில் மட்டும் 376 சவரன் நகைகள், 1.76 கோடி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இவர்கள் மீது விருதுநகரில் 20 வழக்குகளும், மதுரையில் 14 வழக்குகளும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் தலா 14 வழக்குகளும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button