தமிழகம்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் ! 10 கோடி ஊழல் குற்றச்சாட்டு காரணமா ?.!

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் சிறப்பு நிலை செயல் அலுவலர் குணசேகரன் 30.6.2024 இன்று பணி ஓய்வுபெற இருந்த நிலையில், இவர் பணிபுரிந்த காலங்களில் தணிக்கை அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் செய்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையில் விசாரணையும் நிலுவையில் உள்ளதால், தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குநர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பணிபுரிந்த காலங்களில், சமர்பித்த தணிக்கை அறிக்கைகளில் 356 தணிக்கை பத்திகள் நிலுவையில் உள்ளதாகவும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளது. மேலும் இவர் திருப்போரூர் பேரூராட்சியில் பணிபுரிந்த போது, ஒப்பந்ததாரர்களிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் சமீபத்தில் பணிபுரிந்த இடங்களில் மட்டுமே சுமார் 10 கோடிக்கும் மேலாக ஊழல் நடந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

மேலும் செங்கல்பட்டு மண்டலம், உள்ளாட்சி நிதித் தணிக்கை இணை இயக்குநர் அலுவலகத்திலும் செயல் அலுவலர் குணசேகரன், காஞ்சிபுரம் மாவட்ட உதவி இயக்குநர் திருமதி லாதா ஆகியோர் மீதுள்ள புகார்களின் விசாரணை நிலுவையில் உள்ளது. அதிகாரிகள் நேர்மையாக விசாரணை மேற்கொண்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button