மாவட்டம்

கல்வி உதவி தொகைக்காக மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் விதவை தாய் ! கண்டுகொள்ளாத கோவை மாவட்ட நிர்வாகம் !

கோவை திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது பெரிய வதம்பச்சேரி. இங்கு குடியிருந்து வருபவர் கனகமணி (34). கணவர் துளசிராஜன், நெசவு தறி கூலித்தொழிலாளி. சஞ்சீவ் குமார் என்கிற மகனும், தர்ஷணா என்கிற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் இறந்துவிட்டார். தனது ஒரே ஆதரவான கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது குழந்தைகளை வளர்த்து படிக்க வைக்க, தான் நெசவு தொழிலை கற்று தற்போது வாரத்திற்கு 2000 ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். வருமையின் காரணமாக வாட்கை வீட்டில் இருந்து தனது தாயார் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் குடியேறி 5 ஆண்டுகளாக கூலி வேலை செய்து தனது குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது மகன் சஞ்சீவ் 10 ஆம் வகுப்பிலும், மகள் தர்ஷணா 6 ஆம் வகுப்பிலும் படித்து வரும் நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளி படிப்பிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி தொகை வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிதிருந்தார். விண்ணப்பத்தின் பேரில் நடவடிக்கை எடுத்து மாணவரின் பெயரில் ரூ.75,000.00 வழங்கப்படும் என கோவை முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து கனகமணிக்கு கடிதம் வந்துள்ளது. ஆனால் உதவி தொகை வழங்க தாமதமானதை தொடர்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை தொடர்புகொண்டபோது, எப்போது வரும் என கூறமுடியாது எனவும் கூறியுள்ளனர்.

இளம் வயதில் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளை வளர்க்க கூலி வேலை செய்து வரும் கனகமணி 5 ஆம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். தனது குழந்தைகளாவது நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும் என இருவரையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துகொண்டிருக்கும் தாயாரின் இலட்சியத்தை நிறைவேற்ற கல்விக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு விதவை தாயாரின் கல்வி உதவி தவத்திற்கு விடை கொடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button