தமிழகம்

திருப்பூர் அருகே ஆன்லைன் கடன் மோசடி..! மனைவி குழந்தை பரிதாப பலி… கணவர் உயிர் ஊசல்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் இவரது மனைவி விஜி இவர்களுக்கு வின்சிலின் என்ற ஆறு வயது குழந்தை உள்ளது. ராஜீவ் தனியார் நூல் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த வாரம் சமூக வலைதளத்தில் கடன் கொடுப்பதாக வந்த லிங்கை ராஜீவ் பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரை தொடர்பு கொண்ட நபர்கள் 2 லட்ச ரூபாய் வரை கடன் வழங்க தயாராக இருப்பதாகவும் அதற்கான ஆவண செலவு இருப்பதாக கூறி 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். 40 ஆயிரம் ரூபாய் பணத்தை ராஜு தனது நண்பர்களிடம் கடனாக பெற்று ஆவண செலவுக்கு வழங்கி உள்ளார்.

ஆனால் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட நபர் கூறியபடி லோன் பெற்று தரவில்லை. பிறகு அவரது தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் ராஜீவ் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் 40 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜீவ் குடும்பத்துடன் எலிமருந்தை உட்கொண்டுள்ளார். பிறகு கரடிவாவி பேருந்து நிலையம் அருகே குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தபோது ஆறு வயது சிறுமி வின்சிலின் வாந்தி எடுத்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் 6 வயது சிறுமி வின்சிலின் மற்றும் தாய் விஜி சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தடுத்து உயிர் இழந்துள்ளனர். ராஜீவ் உயிருக்கு ஆபத்தான நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button