மாவட்டம்

சிகிச்சைக்குப் பின் காட்டிற்குள் சென்ற புலி ! ஆனைமலை வனப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் அதிகாரிகள் !

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம்  அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழானவயல் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலிகளை கண்காணிக்கப்பட்டு வந்ததில், ஆண் புலி ஒன்று காயமடைந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் ராமசுப்பிரமணியம் (இ.வ.ப)  மற்றும்  துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா (இ.வ.ப) ஆகியோர் உத்தரவின் பேரில் அமராவதி வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில், 50 பேர் கொண்ட தனி குழு அடர்ந்த வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவின் பேரில் மூன்று இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டு, புலிகளை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று கூண்டில் புலி அகப்பட்டதையடுத்து, தேசிய புலிகள் ஆணையத்தின்  வழிமுறைகளின் படி, கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம் ஆகிய இருவரும் கூண்டில் பிடிபட்ட புலிக்கு  மயக்க மருந்து செலுத்தி, உடலில் சுற்றி இருந்த கயிறை அகற்றி உரிய மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். அதன்பிறகு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அடர்ந்த வனப்பகுதியில் புலியை கூண்டிலிருந்து விடுவித்துள்ளனர்.

பின்னர் இதுசம்பந்தமாக வனச்சரக அலுவலர் சுரேஷ் கூறுகையில்,  புலி தற்போது நலமாக இருக்கிறது. மருத்துவர்கள் புலிக்கு சரியான சிகிச்சை அளித்துள்ளனர். அடுத்த ஒரு மாதத்திற்கு புலி நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button