விமர்சனம்

சமூகத்தின் நிகழ்காலத்தை பிரதிபலிக்கிறதா.!? “ஆதார் திரைப்படம்” 4/5

வெளியூரில் இருந்து சென்னைக்கு பிழைப்புத்தேடி வந்த பச்சமுத்து ( கருணாஸ் ) கட்டிடத் தொழிலாளியாக தனது மனைவி துளசியுடன் ( ரித்விகா ) வேலை பார்த்து வருகிறார். துளசிக்கு பிரசவவலி ஏற்பட்டதால் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைபேறுக்காக அனுமதிக்கப் படுகிறார். அங்கு பெண்கள் வார்டு என்பதால் துளசிக்கு உதவியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார் சரோஜா ( இனியா ). இந்நிலையில் தான் வேலை பார்க்கும் கட்டத்திற்கு சென்று சம்பளத்தை வாங்கிக் கொண்டு மருத்துவமணைக்கு பச்சமுத்து வந்து பார்க்கும் போது தன் மனைவி துளசியை காணவில்லை. அப்போது மருத்துவமனையின் பின்புறம் கழிவுநீர் தொட்டியில் பிணமாக கிடக்கிறார் சரோஜா.

இதனையடுத்து தனது குழந்தையை தூக்கிக் கொண்டு காவல் நிலையம் சென்று தன் மனைவி துளசியை கண்டுபிடித்துத் தருமாறு புகார் கொடுக்கிறார். அப்போது புகாரை பதிவு செய்யும் ஏட்டு கல்யான போட்டோ ஏதாவது இருக்கிறதா? என கேட்க துளசியின் ஆதார் அட்டையை கொடுக்க அதை தனது போனில் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் அந்த காவலர். காணாமல் போன துளசி என்ன ஆனார்? சரோஜாவின் இறப்புக்கு என்ன காரணம்? பச்சமுத்து வாழ்க்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை…..

பச்சமுத்தாக நடித்துள்ள கருணாஸ் கைக்கழந்தையோடு தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு பரிதவிப்பது, ஒரு கட்டத்திற்கு மேல் ஐயா எப்படியாவது என் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதருவது, குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தன் மனைவி துளசியை நினைத்து ஏங்குவது, அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராட முடியாமல் தனது இயலாமையை நினைத்து கண்ணீர் சிந்துவது என காட்களுக்கு தகுந்தவாறு தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாஸ்.

படம் பார்க்கும் போது ஒரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என யூகிக்க முடியாதவாறு, எதிர்பார்ப்புடன் இருக்கையின் நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதிகாரமும் பணமும் இருந்தால் நீதியைக்கூட விலைக்கு வாங்கிவிடலாம் என்ற இன்றைய காலகட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறது இந்த ஆதார் திரைக்கதை.

படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்துள்ள உமா ரியாஸ், காவல் ஆய்வாளராக நடித்துள்ள பாகுபலி பிரபாகர் ( விஜயன் ), முதல் நிலை காவலராக நடித்துள்ள அருண் பாண்டியன் என ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை போட்டி போட்டு செய்து முடித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். கருணாஸ், அருண் பாண்டியன் இருவரும் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தவர்கள், இனி குணச்சித்திர நடிகராக கருணாஸை பாராட்டுவார்கள்.

மொத்தத்தில் ஆதார் திரைப்படம் சமூகத்தில் நடைபெற்ற சம்பவங்களை பிரதிபலிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button