“பிரேமலு” திரைவிமர்சனம்
பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில், கிரீஸ் AD இயக்கத்தில், நஸ்லென், மமிதா பைஜு, அல்தாப் சலீம், ஷியாம் மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பிரேமலு”.
கதைப்படி.. கேரளாவில் சச்சின் ( நஸ்லென் ) பொறியியல் படிக்கும்போது ஒரு பெண்ணை விரும்புகிறான். அந்தப் பெண் வேறொருவரை விரும்புவதாக கூறுகிறார். இதனால் மனமுடைந்த நிலையில், லண்டன் செல்ல முடிவு செய்து பெற்றோரிடம் பணம் கேட்க, அவர்கள் மறுத்ததும், தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி விசாவுக்கு விண்ணப்பிக்கிறான். ஆனால் விசா கிடைக்காமல் போகிறது. இந்நிலையில் வருத்தத்தில் இருக்கும்போது தற்செயலாக தனது பழைய நண்பன் அமல் டேவிஸ் ( சந்தோஷ் பிரதாப் ) சந்திக்கிறான். அவன் ஹைதராபாத்தில் எம்டெக் படிப்பிற்கு கேட் நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருவதாகவும், நீயும் என்னோடு வா என அமல் டேவிஸ் அழைக்க அவனோடு ஹைதராபாத் செல்கிறான் சச்சின்.
அந்த பயிற்சி மையத்தில் சேர்ந்த சில நாட்களில், இது ஒத்துவராது சென்னைக்குச் சென்று ஏதாவது வேலை பார்க்கலாம் என முடிவு செய்கிறான் சச்சின். இந்நிலையில் அந்த மையத்தின் ஆசிரியர் திருமணத்திற்கு ஒரு கிராமத்திற்கு அமல் டேவிஸ் உடன் செல்கிறான். அங்கு மணப்பெண்ணின் தோழி ரீனுவை ( மமிதா பைஜு ) சந்திக்கிறான். அவரைப் பார்த்ததும் சச்சினுக்கு பிடித்துப்போக அவரது மனதைக் கவரும் வகையில் ஏதேதோ செய்து பார்க்கிறார் சச்சின். ஆனால் இவரது செயல்பாடுகளுக்கு தடைபேடும் விதமாக ரீனுவின் டீம் லீடர் குறுக்கிடுகிறார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து ஹைதராபாத் திரும்பும் போது ரீனுவும் அவரது தோழி கார்த்திகாவும் ( அகிலா ) இவர்களது காரில் வருகின்றனர். ஹைதராபாத் வந்ததும் ரீனுவுக்காகவே எங்கேயும் போகாமல் ஹைதராபாத்தில் இருக்க வேண்டும் என முடிவு செய்கிறான் சச்சின். இவரது மனதில் உள்ளதை ஒருநாள் அமல் டேவிஸ் மூலம் கார்த்திகாவிடம் சொல்ல ரீனு எதிர்பார்க்கும் எந்த தகுதியும் சச்சினுக்கு என சொல்கிறார்.
சச்சின் ரீனு காதல் நிறைவேறியதா ? சச்சின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது மீதிக்கதை…
நகைச்சுவை கலந்த காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படம் மலையாளத்தில் பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகி, வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. தமிழிலும் தற்போது வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.