ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பெண்னுக்கு கொலை மிரட்டல் ! “இ மெயில்” திரை விமர்சனம்
எஸ்.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில், எஸ்.ஆர். ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “இ மெயில்” இப்படத்தில் ராகினி திவிவேதி, அசோக், ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஶ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ளது.
கதைப்படி… ஐந்து பெண்கள் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். அதற்கான வாடகையை அனைவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். அபி ( ராகினி திவிவேதி ) ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கு சம்பளம் சரியான முறையில் கிடைக்காததால் வாடகை கொடுப்பதில் தாமதமாகிறது. அந்த வேலையை விட்டுவிட்டு வேறு தேடி அழைக்கிறார். அப்போது கைபேசியில் வீடியோ கேம் விளையாடுகிறார். அந்த சமயத்தில் ஒரு கேம் சம்பந்தமாக அழைப்பு வர, அதை அபி கிளிக் செய்யவும் அந்தப் விளையாட்டில் அவர் ஒரு லட்சம் ரூபாய் வின் பண்ணுகிறார். இதே நிலை தொடர லட்சக்கணக்கில் ஜெயித்து ஜாலியான வாழ்க்கை வாழ்கிறார். அப்போது விமல் ( அசோக் ) மீது காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் போது, பத்து லட்ச ரூபாயை ஆன்லைன் விளையாட்டில் தோற்கிறார். பின்னர் இழந்த பணத்தை மீட்க முயற்சிக்கிறார். அப்போது ஒரு மிரட்டல் அழைப்பு வருகிறது. அதிலிருந்து தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்தவண்ணம் இருக்கிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானதால் அபியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அந்த சமயத்தில் சொன்ன வேலையை முடிக்காததால் இவரது கணவர் விமல் கடத்தப்படுகிறார்.
கடத்தப்பட்ட அவரது கனவரை மீட்டாரா ? ஆன்லைன் விளையாட்ட்டிற்கு அடிமையான அபி அதிலிருந்து மீண்டு வந்தாரா ? என்பது மீதிக்கதை…
ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சீரழியும் சமூகத்தை சீர்திருத்தக் கூடிய நல்ல கதையை தேர்வு செய்த இயக்குநர், சொன்ன விதத்தில் கொஞ்சம் கவணம் செலுத்தி இருக்கலாம். பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நாயகி ராகினி திவிவேதி தனது வெளிப்படுத்தியிருக்கிறார். அசோக் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.