அரசியல்

பா.ம.கவை விட்டு விலகியது ஏன்?: நடிகர் ரஞ்சித்

சாதிப் பிரிவினையை இப்போதைய ஆட்சியாளர்கள் உருவாக்குகிறார்கள். இதையெல்லாம் சரிசெய்ய ஒரு கட்சி வேண்டாமா. அதுதான் பா.ம.க. இவர்களிடமிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்துச் சீர்ப்படுத்தக்கூடிய தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் உண்டு. அது திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழகத்தை ஆளும் தலைமைப் பதவியை ஏற்றால்தான் முடியும். அவரை பெரிதும் நம்பிய வட தமிழக மக்களை ஒரு வினாடியில் ஏமாற்றிவிட்டார். அ.தி.மு.கவுக்கு பா.ம.க வைத்துள்ள 10 அம்ச கோரிக்கை என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை. அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் நடிகர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க இணைந்துள்ளது. பா.ம.கவுக்கு 7 தொகுதிகளை அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது. இருப்பினும், அ.தி.மு.க, பா.ஜ.கவுடன் பா.ம.க கூட்டணி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பா.ம.கவின் முடிவுக்கு அவர்களது கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிட்ட அன்றே, அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் ராஜேஸ்வரி கட்சியிலிருந்து விலகினார். இந்தநிலையில், பா.ம.கவின் துணைத் தலைவர் நடிகர் ரஞ்சித் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித், ‘நாட்டில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நினைத்துதான், பா.ம.கவில் இணைந்தேன். அன்புமணி, அவர் பின்னால் வந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளார். அவரை பெரிதும் நம்பிய வட தமிழக மக்களை ஒரு வினாடியில் ஏமாற்றிவிட்டார். அ.தி.மு.கவுக்கு பா.ம.க வைத்துள்ள 10 அம்ச கோரிக்கை என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை.
அந்த கோரிக்கையை நிறைவேற்றினால்தான் கூட்டணி சேருவேன் என்று கூறியிருக்கலாமே? யாரை எதிர்த்து போராடுகிறோமோ அவர்களுடன் அமர்ந்து விருந்து சாப்பிடுவதை என்னால் ஏற்க முடியாது. மதுக் கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவிட்டு மதுக் கடைகளை நடத்துபவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளனர்.
நான்கு பேருக்கு கூஜா தூக்கி என்னால் வாழ முடியாது. உள்ளாட்சித் தேர்தல்வரை அ.தி.மு.கவுடன் பா.ம.க இணைந்திருக்கும். அதன்பிறகு விலகிவிடும். அன்புமணியால், எப்படி மக்களிடம் சென்று வாக்கு சேகரிக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பினார்.
அ.தி.மு.கவிலிருந்த நடிகர் ரஞ்சித் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி ராமதாஸை சந்தித்து பா.ம.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button