அரசியல்
பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர்களிடம் வைகோ மனு
பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அமைச்சர்களை சந்தித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு அளித்தார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகாசியில் 1070 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு, எட்டு லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது அலுவலகத்தில் நானும், இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வெங்கடேசும், தற்போதைய இணைச் செயலாளர் ராஜப்பனும் சந்தித்தோம். அதேபோல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்து, பட்டாசு தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கு தேவையான கோரிக்கையை சுட்டிக்காட்டியும் கோரிக்கை மனுவை வழங்கினோம். வர்த்தக தொழில் அமைச்சரிடமும் மனு அளித்தோம்.