பிரபல ரவுடியை தீர்த்துக்கட்ட திட்டமிடும் சினிமா இயக்குனர் ! “ஜிகர்தண்டா” படத்தின் திரைவிமர்சனம்
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில்,ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”.
கதைப்படி… மதுரையில் அரசியல் செல்வாக்குடன் வலம் வருகிறார் அலியஸ் சீசர் ( ராகவா லாரன்ஸ் ). தென் மாவட்டங்களில் வலம்வரும் அனைத்து ரவுடிகளும் கலந்துகொண்ட பார்ட்டியில் கருப்பா நடிகராக முடியாது என சினிமா ஹீரோ ( அரவிந்த் ஆகாஷ் ) சீசரை சீண்ட, கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகரான சீசருக்கு நடிகராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பின்னர் இயக்குனர் தேவை என பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து கதை கேட்க ஆரம்பிக்கிறார் சீசர். பிரபல இயக்குனர் சத்யஜித் ரே வின் உதவியாளர் எனக்கூறி ரே தாசன் ( எஸ்ஜே சூர்யா ) கதை சொல்ல வருகிறார். சீசர் விரும்பியதுபோல் இல்லாமல், சீசரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் என்கிறார்.
இதற்கிடையில் தென்மாவட்டங்களில் மிகப்பெரிய ரவுடிகளாக வலம்வரும் சீசர் உள்ளிட்ட நான்குபேரை தீர்த்துக்கட்ட சிறையிலிருந்து நான்குபேரை தேர்வுசெய்து அனுப்பி வைக்கிறார் காவல் ஆய்வாளர். அதில் சீசரை தீர்த்துக்கட்ட வந்தவர்தான் ரே தாசன்.
சீசரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை நினைத்ததுபோல் படம் பிடித்தார்களா ? அல்லது சீசரை தீர்த்துக்கட்டினாரா ? ரவடிகளை அழித்து தூங்கா நகரமான மதுரை அமைதிப் பூங்காவாக மாறியதா என்பது மீதிக்கதை…
மலைவாழ் மக்களின் வாழ்வியல், இயற்கையை சூரையாட நினைக்கும் அரசியல் என வித்தியாசமான திரைக்கதையை அமைத்து, அனைவரும் ரசிக்கும்படியான வசனங்களுடன் அற்புதமான படைப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது திறமையை இருவேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.