சிசிடிவி மூலம் பெண் உடை மாற்றும் வீடியோ பதிவு! : சென்னையின் பிரபல ஓட்டல் மீது புகார்!
கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். அங்கே அருகே உள்ள சென்ட்ரல் இன் ஒயொ ஓட்டலில் அறை எடுத்து சுரேஷ் தங்கியுள்ளார். ஒட்டு மொத்தமாக சுரேஷ் குடும்பத்தினர் 46 பேரும் அந்த விடுதில் உள்ள அறைகளில் தங்கினர்.
அந்த ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த கேமரா ஒவ்வொன்றும் அறையின் கதவை நோக்கி இருந்தது. அதாவது அறை கதவை திறந்தால் உள்ளே நடப்பதை பதிவு செய்வது போல் இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் பெண்கள் சிலர் அறைக்கதவை திறந்து வைத்த நிலையில் உடை மாற்றியதாக கூறப்படுகிறது.
அப்போது பெண் ஒருவர் அறைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் சிவப்பு விளக்கு மின்னி மின்னி மறைந்ததை பார்த்துள்ளார். உடனே தாங்கள் உடை மாத்துவது அந்த கேமராவில் பதிவாகிவிட்டதாக அந்த பெண் கூப்பாடு போட்டுள்ளார். உடனடியாக வரவேற்பையில் உள்ள கணினியை அவர்கள் சோதனையிட்டுள்ளார்.
அப் போது அவர்கள் குடும்பத்தை சார்ந்த பெண் ஒருவரின் உடை மாற்றும் வீடியோ பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த குடும்பத்தினர் விடுதி நிர்வாகிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் எப்படி உடை மாற்றும் வீடியோவை பதிவு செய்யலாம் என்று அவர்கள் பிரச்சனை செய்தனர்.
ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் அடிதடி சண்டை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். ஆனாலும் கூட சுரேஷ் குடும்பத்தினர் விடுவதாக இல்லை. போலீசார் விடுதிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அருகில் இருக்கும் பெரியமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். உடை மாற்றும் போது அறைக்கதவை ஏன் திறந்து வைக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகிகள் கேள்வி எழுப்பிகின்றனர். விடுதி வளாகத்தில் உள்ள அனைத்து கேமராவும் விடுதி கதவை நோக்கி தான் உள்ளது என்றும் அவர்கள் விளக்கம் கொடுத்தனர்.