அமலாக்கத்துறை யின் அடுத்த அதிரடி ! நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஆதாரங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில முக்கிய கோப்புகள் ( பைல் ) கிடைத்திருக்கிறது. அந்த கோப்புகளில் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கு அரசு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கான டெண்டர் கொடுத்திருக்கிறது. அதில் அரசுக்கு ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிப்பதாகவும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னூறு கோடி ரூபாய் கமிஷன் பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளதாம்.
தமிழ்நாடு அரசுக்கு நிலக்கரி சப்ளை செய்ய 1. பாராதயா எனர்ஜி ( இந்தோனேசியா ), 2. மகேஸ்வரி ( வடமாநில நிறுவனம் ), 3. ஸ்மார்ட் சென் ( ஹைதராபாத் ), இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பத்து லட்சம் டன் நிலக்கரி சப்ளை செய்ய L-1, L-2, L-3 என பிரித்து தமிழ்நாடு அரசு டெண்டர் வழங்கியிருக்கிறது.
அதாவது 10 லட்சம் டன் நிலக்கரி கொள்முதல் செய்ததில், ஒரு டன் நிலக்கரி சந்தை மதிப்பு 54 டாலர் ( இந்திய ரூபாய் மதிப்பு 4,320 ரூபாய் ), தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது 136 டாலர் ( 10,880 ரூபாய்க்கு ) ஒரு டன் நிலக்கரியை கொள்முதல் செய்திருக்கிறது. இதனால் ஒரு டன் நிலக்கரிக்கு 6,560 ரூபாய் அமைச்சருக்கு கமிஷன் கிடைத்திருக்கிறது. இதில் செந்தில்பாலாஜிக்கு கிடைக்க வேண்டிய 300 கோடி ரூபாயை அவரது தம்பி அசோக் பெற்றிருக்கிறார். அந்தப் பணத்தில் மேலிட அமைச்சருக்கு பங்குத் தொகை கொடுக்கப்பட்டதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்த தகவல்களை இந்திய உள்துறை அமைச்சருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது ஆலோசனைப்படி அமைச்சர் செந்தில்பாலாஜி யின் சகோதரர் அசோக் மீது வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராகி வருகிறார்களாம்.
இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் பின்புலமாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் கோலோச்சிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இருந்ததாகவும், அவரையும் அமலாக்கத்துறை யின் கிடுக்கிப்பிடி யின் கீழ் விசாரணை வலையத்தில் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்களாம்.