தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ! வெற்றி வாய்ப்பு யாருக்கு ?.!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மன்னன், தேனாண்டாள் முரளி தலைமையிலான இரண்டு அணியினரும் தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வாக்களிக்க தகுதியான தயாரிப்பாளர்களில் பெரும்பாலான நபர்களிடம், நமது குழுவினர் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் ? ஏன் அவர்கள் வெற்றிபெற வேண்டும் ? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்து கருத்து கணிப்பு மேற்கொண்டனர். அதன் விபரம் பின்வருமாறு….
தலைவர்
தலைவர் பதவிக்கு 1. முரளி ராமசாமி, 2. மன்னன் ஆகிய இரண்டு பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் இருவரில் முரளி ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் தலைவராக இருந்தபோது சங்கத்தின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை. சங்கத்தில் தயாரிப்பாளர்கள் கொண்டுவந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு செயலாளராக இருந்த மன்னன் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாமல் முடிவுகள் எடுத்துள்ளார். இதில் பல தயாரிப்பாளர்கள் பயண்பெற்றுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் சங்கத்திற்கு ஒரு மாற்றம் தேவை. ஆகையால் எங்கள் ஓட்டு மன்னனுக்கே என பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள வேட்பாளர்கள் :
துணைத் தலைவர்கள் :
1. தமிழ்க்குமரன் , 2. விடியல் ராஜ் அல்லது கல்பாத்தி அர்ச்சனா. ( இருவருக்கும் இழுபறி நிலையில் விடியல் ராஜுக்கு சற்று அதிக வாய்ப்பு )
செயலாளர்கள் :
1. கமிலா நாசர், 2. கதிரேசன் ( 5 ஸ்டார் ), இன்னொரு கதிரேசன் வாக்குகளைப் பிரித்தால் தேனப்பன் வெற்றி பெறலாம்.
பொருளாளர் :
1. சந்திரபிரகாஷ் ஜெயின், ரவீந்திரன் இருவருக்கும் கடுமையான போட்டியாக இருக்கலாம். இறுதியில் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இணைச் செயலாளர் :
1.மணிகண்டன்,
செயற்குழு உறுப்பினர்கள் :
மன்னன் அணியினர்,
1. தேவயானி, 2. பி.டி. செல்வக்குமார், 3. பிரவின் காந்த், 4.ராசி அழகப்பன், 5. எஸ்.முருகராஜ், 6. எஸ். கமலக்கண்ணன், 7. அடிதடி முருகன், 8. ராஜசேகரன் (எ) சாந்தகுமார்,9. நீல் கிரிஸ் முருகன், 10. கனல் கண்ணன், பைஜா டாம், 11. ராஜ் சிற்பி, 12. ஏழுமலை, 13. சுரேஷ் கண்ணன்,
இவர்கள் தவிர முத்அம் சிவக்குமார், பாலாஜி, சீனிவாசன், கிச்சா, வீரா ஆகியோரும் வெற்றிப் பட்டியலில் இடம்பெறலாம் !
முரளி ராமசாமி அணியினர் :
14. அழகன் தமிழ்மணி, 15. மாதேஷ், 16. சித்ரா லட்சுமணன், 17. ஹச். முரளி, 18. சுபாஸ் சந்திரபோஸ், 19. உதயா, 20. சக்தி சிதம்பரம், 21. மிட்டாய் அன்புதுரை, 22. மணோஜ் குமார், 23. பெரும்பாக்கம் ராமச்சந்திரன், 24. பழனிவேல், 25. தாய் சரவணன், 26. விஜய் முரளி.
இந்த அணியில் கபார், ஜெ.செந்தில்குமார் ஆகியோரும் வெற்றிப் பட்டியலில் இடம்பெறலாம்.
இரண்டு அணியினரும் நேற்று நடத்திய கூட்டத்திற்குப் பிறகு மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவல்களையும் நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள்.