பல்லடம் வியாபாரிகளின் வாடைகை பாக்கி ரூ. 1.45 கோடி தள்ளுபடி : நகராட்சி தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகம், தினசரி மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகியவற்றில் உள்ள 204 கடைக்காரர்கள் கொரோனா ஊரடங்கின் போது வருவாய் இழப்பு ஏற்பட்டதால் தங்களுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து பல்லடம் நகர் மன்ற தலைவர் கவிதாமணி ராஜேந்திரன் மூலமாக தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனை ஏற்று 5 மாத வாடகையை 204 கடைக்காரர்களுக்கு ரூ.1 கோடியே 45 லட்சம் 42 ஆயிரம் 260 வாடகையை தள்ளுபடி செய்ய ஆணையிட்ட தமிழக மக்களின் பாதுகாவலர் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பரிந்துரை செய்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இதனை தொடர்ந்து முன்னெடுத்த பல்லடம் நகர்மன்ற தலைவர்க்கும், பல்லடம் நகரச்செயலாளர் ராஜேந்திரகுமாருக்கும் ஏராளமான பல்லடம் வியாபாரிகள் மற்றும் பல்லடம் தாலுக்கா வியாபாரிகள் சங்கம் சார்பாக பாராட்டி நன்றிகளை தெரிவித்தனர். உடன் நகராட்சி ஆணையாளர், வருவாய் ஆய்வாளர், நகர கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர்கள் கலந்துகொண்டனர்.