திருப்பூரில் ரூ. 35 லட்சம் நூதன மோசடியில் மின்வாரிய ஊழியர்கள்
திருப்பூர் தொழில்சாலையில் மின் மோட்டரை எரித்து மின்வாரியத்திற்கு ரூபாய். 35 லட்சம் நூதன மோசடியில் ஈடுபட்ட 5 மின்வாரிய ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஏபிடி., சாலை மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட தொழில்சாலை ஒன்றில் மின் மீட்டரை எரித்து மின்பயன்பாட்டில் மோசடி செய்து மின்கட்டணத்தை குறைத்து பதிவிட்டுள்ளனர். இதனிடையே நூதன மோசடியால் ரூ. 35 லட்சம் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக தொமுச நிர்வாகி சரவணன் என்பவர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜிடம் புகார் மனு அளிதிருந்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் மின் மீட்டர் எரிக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து மேற்படி மீட்டர் எரிப்பு மோசடியில் ஈடுபட்ட தொழில்சாலைக்கு ரூபாய். 17.53 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அடுத்து மோசடிக்கு உடைந்தையாக இருந்த போர்மேன் பாபு மற்றும் கணபதி, உதவி பொறியாளர் நிர்மல்குமார், வணிக ஆய்வாளர் பழனிச்சாமி, உதவி மின்பொறியாளர் சொக்கலிங்கம் ஆகிய 5 பேர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
சாதாரண பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த ஒரு நாள் தாமதமானாலே நடவடிக்கை எடுக்கும் மின்வாரிஊழியர்களே மோசடியில் ஈடுபட்டதால் அதிக பட்ச தண்டனை வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.