தமிழ்நாட்டைச் சுற்றிவரும் இலங்கை வாலிபரின் சைக்கிள் பயணம் ! கண்காணிக்க தவறியதா உளவுத்துறை ?.!
தமிழ் நாட்டில் பூமி வெப்பமயமாவதை தடுக்கவும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வவுணியா பகுதியைச் சேர்ந்தவர் பிரதாபன் தர்மலிங்கம் (47). இலங்கை பிரஜையான இவர் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி 3 மாதகால விசாவில் இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த மாதம் ஜூலை 23 ஆம் தேதி சென்னையில் இருந்து சைக்கிளில் பயணத்தை துவங்கிய பிரதாபன் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், சேலம் வழியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்தடைந்தார். பின்னர் பல்லடம் அரசுக் கல்லூரியில் மரம் நட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாபன், இலங்கையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி பின்னர் பணியில் இருந்து விலகியுள்ளதாகவும், திருமணம் ஆகவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் 38 நாட்களில் 38 மாவட்டங்களில் மரம் நடுவதன் அவசியம் குறித்து சுமார் 3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருவதாகவும், தற்போது பல்லடத்தில் இருந்து சூலூர் வழியாக கோவை சென்று நீலகிரி மாவட்டத்தை அடைந்து, பின்னர் அங்கிருந்து மதுரை, கன்னியாகுமரி சென்று பின்னர் சென்னையை சென்று பயணத்தை முடித்துக் கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
இதனிடையே இலங்கையைச் சேர்ந்த பிரதாபன் மேற்கொண்டிருக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்திற்கு முறையாக அனுமதியோ, தகவலோ தெரிவிக்காமல் மேற்கொண்டிருப்பது உளவுத்துறை கண்காணிக்க தவறியதோ? என்கிற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களை வெளி நாட்டைச் சேர்ந்த ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தினாலும் பயணத்திற்கான செலவுகள் அனைத்தும் நண்பர்கள் மூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சூலூர் போன்ற விமான படை தளங்கள் அமைந்திருக்கும் பகுதியை கடந்து செல்வது மற்றும் வெடி மருந்து தொழில்சாலை அமைந்துள்ள அரவங்காடு, ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ள வெளிங்டன் பகுதியை கடந்து செல்ல போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் இல்லையா? மேலும் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இலங்கையை சேர்ந்த பிரதாபனின் பாதுகாப்பிற்கு யார் பொருப்பு? சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் பிரதாபன் அரசுத்துறை சார்ந்த அலுவலக வளாகங்களில் எவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தினார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது. ஒரு நாடு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்வதில் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் தான் உள்ளது. ஆனால் பிரதாபன் போன்ற வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் போது அனுமதி பெற்று நடத்தினால் தான் அதன் பயன் பொதுமக்களை சென்றடையும்.
இந்நிலையில் பிரதாபனின் சைக்கிள் பயணத்தை உளவுத்துறை கண்காணித்து பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை உறுதி செய்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.மேலும் ஜனாதிபதியின் நீலகிரி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு அவசியம் எனவும் கருதப்படுகிறது.