தமிழகம்

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவி : மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த மூர்த்தி -&நீலாவதி தம்பதியர்களின் மகளான கல்லூரி மாணவி சாருலதா. இவர் ராமநாதபுரத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் பி.ஈ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சம்பவ நாளன்று மாலை தனது வீட்டிற்குச் செல்வதற்காக சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தவரை பரமக்குடியில் பிரபலமான தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியின் தற்காலிக வேன் ஓட்டுநர் செல்போன் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டியதால் மாணவி சாருலதா மீது பயங்கரமாக மோதியதுடன், இழுத்துச் சென்றதால் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.


இதனைத் தொடர்ந்து, அவரது இறப்புக்கு நிர்வாகத்தினர் மனிதாபிமானம் இல்லாமல் முறையற்ற வார்த்தைகளை கூறியதாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு சம்மந்தப்பட்ட பள்ளி வேன்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் இருந்த போலீஸார்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், சம்பவ நாளான 07.02.19. வியாழக்கிழமை காலை, இறந்த கல்லூரி மாணவி சாருலதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உடலை வாங்க மறுத்து, குடும்பத்தினர்கள், உறவினர்கள், கல்லூரி மாணவர்-மாணவியர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக திரண்டு பரமக்குடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வெகு நேரமாக சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர்கள் மருத்துவமனைக்கு வந்து பேச்சு – வார்த்தை நடத்த வலியுறுத்தினர்.


இதனிடையே, பள்ளி நிர்வாகத்தினர்கள் யாரும் வராததால் கோபம் அடைந்த அனைவரும் தீடீரென மருத்துவமனை முன்பு தேசீய நெடுஞ்சாலையில் அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன்,  இறந்த மாணவியின் விபத்து விபரங்களை கேட்டறியக் கூட மருத்துவமனைக்கு வராத பள்ளி நிர்வாகமே…
இறந்த மாணவியின் குடும்பத்திற்கு போதிய நிதியை கொடுப்பதற்கு முன் வராத பள்ளி நிர்வாகமே…
என கோஷமிட்டு பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமக்குடி தாசில்தார் பரமசிவம், டி.எஸ்.பி. ஆர்.சங்கர் மற்றும் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் உள்பட போலீஸார்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இரு தரப்பிலும் ஒரு குழு அமைத்து தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதின் பேரில், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து அரசு மருத்துவமனைக்குள் சென்றனர்.

முன்னதாக, சம்பவம் அறிந்து, தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ், பரமக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.முத்தையா, அவரது துணைவியார் சாந்தி முத்தையா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விவரங்களை கேட்டறிந்தனர். பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பரமசிவம், டி.எஸ்.பி. ஆர்.சங்கர் முன்னிலையில் இரு தரப்பினர்களுக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இறந்த கல்லூரி மாணவி சாருலதாவின் உடலை குடும்பத்தினர்கள் பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்தனர். அது சமயம் அங்கு கல்லூரி மாணவ – மாணவியர்கள் உள்பட பெருந்திரளாக கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் துக்கம் கண்களில் கண்ணீர் ஆறாய் கசிந்து வர நெஞ்சை நெகிழச் செய்தது.

பள்ளி -கல்லூரிகளில் பயிலும் மாணவர் – மாணவியர்கள், பொதுமக்கள் நலன் கருதி, இனிமேலாவது சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர்கள் முறையான ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், நல்ல பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை நியமிப்பதுடன், பணியின் போது செல்போன் பேசுவது போன்று கவனம் சிதறாமல் பணியை நிறைவாக செய்ய வேண்டுமென்ற உத்திரவாதத்துடன் பணியமர்த்த வேண்டுமெனவும், அவ்வப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் இந்த வாகனங்களை சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாணவ – மாணவியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button