போலி பத்திரிகை ஆசிரியர்கள்… : கடந்த இதழின் தொடர்ச்சி…
போலியான பத்திரிகையாளர்கள் என்றால் யார் என்று நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். முறையாக RNI பெற்று தற்போது வரை மத்திய அரசு பதிவில் இருக்கும் அனைத்து பத்திரிகைகளும், அதில் பணிபுரியும் அனைவரும் பத்திரிகையாளர்கள் தான்.
இதில் போலிகள் எப்படி உருவாகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.
இதை கீழ்க்கண்டவாறு அறிந்து கொள்ளலாம்.
பத்திரிகையில் உள்ள பெயர் மற்றும் வெளியீட்டாளர் ஆசிரியர் பெயர் என்ன என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு, www.rni.in என்ற இணையதளத்தில் அதே பெயரில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இரண்டிலும் ஒரே பெயரில் இருக்கும் வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமே உண்மையான பத்திரிகையாளர்கள். அதில் பணிபுரியும் அனைவரும் பத்திரிகையாளர்கள் தான்.
இவ்வாறே போலி பத்திரிகையாளர்களையும் அறிந்து கொள்ளலாம். வெளியாகும் பத்திரிகைகளில் ஒரு பெயரும், www.rni.in என்ற இணையதளத்தில் வேறு பெயரும் இருந்தால் பத்திரிகையில் வெளியான நபர் போலி பத்திரிகையாளர் ஆவார். இப்படிப்பட்ட போலி பத்திரிகையாளர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளார் என்பதும் பலருக்கும் பத்திரிகையாளர் அடையாள அட்டை விற்பனை செய்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.
கருடன் என்ற இதழ் கடந்த 66 ஆம் ஆண்டு பதிவு பெற்று தற்போது வரை www.rni.in இணையத்தில் பதிவில் உள்ளது. அதன் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் S.K.M.MOHD IMADULLAH என்று பதிவாகியுள்ளது. ஆனால் பத்திரிகை இதழில் N. RAMESH என்பவர் தான் வெளியீட்டாளர் ஆசிரியர் என்று பதிவாகியுள்ளது. இந்த கருடன் மாத இதழ் ரமேஷ் என்பவர் போலி பத்திரிகையாளர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் அல்ல, பல ஊர்களில் பத்திரிகையாளர் அடையாள அட்டை விற்பனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல பத்திரிகையாளர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் வெளியீட்டாளர் ஆசிரியர் பற்றிய ஆதாரங்கள் வந்துள்ளது. இதை முழுவதும் ஆராய்ந்து, ஆதாரங்களுடன் செய்தி வெளியாகும்.. மீண்டும்..
- ராபர்ட் ராஜ்