விமர்சனம்

“அஸ்வின்ஸ்” படத்தின் திரைவிமர்சனம்

BVSN பிரசாத் தயாரிப்பில், தருண் தேஜா இயக்கத்தில், தரமணி, ராக்கி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி நாயகனாக நடித்துள்ள படம் “அஸ்வின்ஸ்”.

கதைப்படி… பழங்கால ஆன்மீக வரலாற்று கதையில் இரண்டு தெய்வங்களை மையமாக வைத்து கதை தொடங்குகிறது. யூடியூப் சேனலுக்கு வீடியோ எடுப்பதற்காக லண்டனில் உள்ள ஒரு மேன்சனுக்கு இரண்டு பெண்கள், மூன்று ஆண்களுடன் ஒரு குழு செல்கிறது. அங்கு சென்றதும் அமானுஷ்யம் நிறைந்த இடமாக இவர்கள் உணர்கிறார்கள். பயங்கரமான அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர்.

பின்னர் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு அறையாக அங்கு இருப்பதை காட்சிப் படுத்துவதற்காக செல்லும்போது அலறல் சத்தத்துடன் இறந்து போகிறார்கள். இறுதியாக கதாநாயகன் அர்ஜூன் ( வசந்த் ரவி ) மட்டும் உயிரோடு இருக்கிறார். அந்த மேன்சனில் ஏற்கனவே தங்கியிருந்த ஒரு பெண் எழுதி வைத்திருந்த குறிப்புகள் இவரது கண்களில் தென்படுகிறது. பின்னர் அங்கு நடந்த அசம்பாவித சம்பவங்களின் பின்னணி குறித்து ஆராய தொடங்குகிறார்.

அந்த மேன்சனில் உள்ள அமானுஷ்யம் குறித்து வசந்த் ரவி தெரிந்து கொண்டாரா ? இல்லையா ? அனைவரும் இறந்துபோன நிலையில் இவருக்கு என்ன நேர்ந்தது ? என்பது மீதிக்கதை…

இந்தப் படத்திற்கு உயிரோட்டமே இசையும், ஒளிப்பதிவும் தான் என்றே சொல்லலாம். மிரட்டலான காட்சிகளோடு இசையும் சரியான விதத்தில் பயணிக்கும் போது படம் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது. ஒட்டுமொத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.

படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button